சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், பயிற்சியாளர் குழுவை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளது. கடந்த மூன்று சீசன்களிலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்பதால்தான், பயிற்சியாளர் குழுவை மாற்ற முடிவு செய்துள்ளனர்.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஜாகீர் கானை தேர்வு செய்துள்ள நிலையில், பேட்டிங் பயிற்சியாளர் பதவி இடத்திற்கு இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் கரித் பேட்டியை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரித் பேட்டி, ஒரு பௌலிங் ஆல்ரவுண்டராக இருக்கிறார். இவர், 95 டி20 போட்டிகளில் பேட்டிங் ஆடி, 10.33 சராசரி, 101.45 ஸ்ட்ரைக் ரேட்டில் 630 ரன்களைதான் அடித்துள்ளார். பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு, 181 போட்டிகளில் 7.27 எகனாமியில் 155 விக்கெட்களை எடுத்துள்ளார். இப்படி, சுழற்பந்து வீச்சில் அசித்திய வீரருக்கு, பேட்டிங் கோச் பதவி வழங்கப்பட்டது சரிதானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிஎஸ்கே முடிவு சரிதான்: கரித் பேட்டி, இதற்குமுன் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் தொடரில், சர்ரே அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தார். இவரது தலைமையில் 2022, 2023, 2024 என தொடர்ச்சியாக மூன்று முறை, சர்ரே அணி கோப்பையை வென்றுள்ளது.
இவர், டி20-யில் பேட்டிங்கில் பெரிய ரெக்கார்டை வைத்திருக்கவில்லை என்றாலும், தலைமை பயிற்சியாளராக அபாரமாக செயல்பட்டுள்ளார். மேலும், இவரால், பிட்சின் தன்மை, வீரர்களின் பலம், பலவீனம் அனைத்தையும் கணித்து, சரியான பேட்டிங் வரிசையை கட்டமைக்க முடியும். மேலும், இவர் பேட்டிங் கோச்சாக மட்டும் இல்லாமல், சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளார்.
சுழற்பந்து வீச்சு துறையில், நல்ல அனுபவம் கொண்டவர். இதனால், சுழலுக்கு சாதகமான சேப்பாக்கத்தில், மீண்டும் சிஎஸ்கேவை வெற்றிகரமான அணியாக மாற்ற முடியும்.
இப்படி, பல திறமைகளை உள்ளடக்கிய கரித் பேட்டியால், சிஎஸ்கேவுக்கு நன்மைதான் அதிகம். இதனால், பேட்டியை வாங்கியது, சிஎஸ்கேவின் தரமான முடிவாக பார்க்கப்படுகிறது.
சுழற்பந்து வீச்சு படை பலம் பெறும்: கடந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு படை படுமோசமாக சொதப்பியது. குறிப்பாக, சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமலே சிஎஸ்கே அணியினர், ஐபிஎல் 2026 சீசனில் ஆடினார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இப்படியிருக்கையில், தலைமை பயிற்சியாளராக பணியாற்றி, வெற்றிகரமாக ஹாட்ரிக் கோப்பையை பெற்றுக் கொடுத்த பயிற்சியாளரை, சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிப்பதால், அவரால், அணிக்குள் தரமான ஸ்பின்னர்களை கொண்டு வர முடியும். மேலும், அவர்களுக்கு தரமான ஆலோசனைகளை வழங்கி, அணியை பலப்படுத்த முடியும்.
இதனால், கிரேக் பேட்டியின் வருகை, சிஎஸ்கேவுக்கு, முழு பலனும் கிடைக்கும் வகையில்தான் இருக்கும்.
மேலும், காலியாக இருக்கும் சில பயிற்சியாளர் பதவிகளையும் விரைவில் நிரப்ப சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும், ஒரு வார காலத்திற்குள் துணை பயிற்சியாளர்களை நியமனம் செய்தப் பிறகு, டிரேடிங் குறித்த அப்டேட்களை சிஎஸ்கே அடுத்தடுத்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குஜராத் டைடன்ஸ் அணியிடம் இருந்து வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோரை வாங்க, அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
