அன்பில் மகேஷ் கைது விவகாரம்: இன்னும் பல ஃபைல்கள் இருக்கு-திமுகவை அதிரவைத்த நிர்மல் குமார் – anbil mahesh arrest there are many more files nirmal kumar jolts the dmk

தேனியில் செய்தியாளர்களை சந்தித்த தவெக அமைச்சர் நிர்மல்குமார் பேசிகையில், தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி (DTCP) மற்றும் சிஎம்டிஏ (CMDA) உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்ட ஊழல் விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இவ்வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கைது நடவடிக்கையும் நீதிமன்ற உத்தரவு

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தலைமறைவாக இருந்த அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். பின்னர் அவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அரசியல் பிரமுகர்களின் தொடர்பு

ஏற்கனவே இவ்வழக்கில் தொடர்புடைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் ஆவார். இவரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்பில் மகேஷிற்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தலைமறைவாக உள்ள மற்ற தப்பியோடிய நபர்களைக் கைது செய்யக் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள செக்போஸ்ட்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

அப்போது முதல்வர் விஜௌ கூறிய 3 ஃபைல் எது என்று கூறுகையில், “நீங்கள்தானே கேட்டீர்கள், ஃபைலை ஓபன் செய்யுங்கள் என்று… ஒரே ஒரு ஃபைலைத் திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்; இதேபோன்று இன்னும் பல ஃபைல்கள் காத்துக் கிடக்கின்றன” என்று அரசியல் வட்டாரங்களில் பரவிவரும் தகவல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பள்ளிச் சான்றிதழ்களை வைத்து வசூல் வேட்டை

மேலும்,குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காகப் பள்ளி கல்வித்துறை வழங்கும் சான்றிதழ்களைக் கூட முறைகேடாகப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான கோடிகளை இவ்வகையில் வசூலித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பல பள்ளிகளை மிரட்டிப் பணம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம் திமுக கட்சிக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் நீதிமன்ற விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link