நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்: புழல் சிறையில் அன்பில் மகேஷுக்கு என்னென்ன வசதிகள்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு – anbil mahesh judicial custody until november 6 what facilities in puzhal prison

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக கூறி 100 கோடி ரூபாய் முறை கேட்டில் திமுக முன்னாள் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு என்ன மாதிரியான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

திமுக ஆட்சிக்காலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி (DTCP), சிஎம்டிஏ (CMDA) அனுமதிகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் மேல் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அன்பில் மகேஷின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளது திமுக.,வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற அனல் பறக்கும் வாதங்கள்

திமுக தரப்பு வழக்கறிஞர்களின் வாதம்:அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் இந்தக் கைது நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது. காவல்துறை முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் அவரைக் கைது செய்துள்ளது. அவர் முன்னாள் அமைச்சராகவும், பொதுவாழ்வில் நற்பெயர் கொண்டவராகவும் இருப்பதால் அவர் தலைமறைவாக வாய்ப்பில்லை. எனவே, அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பாமல் ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்று வாதிட்டனர். அரசுத் தரப்பு / காவல்துறை வாதம்:இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், “இது சாதாரண வழக்கு அல்ல; கல்வித்துறையில் சுமார் ரூ.100 கோடி வரை லஞ்சமாகப் பெறப்பட்டு நடைபெற்ற இமாலய ஊழல். இந்த முறைகேட்டில் பல துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில் ஆவணங்கள் சிக்கியுள்ளன. அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது இன்றியமையாதது. அவர் வெளியே இருந்தால் தனது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி சாட்சிகளையும் ஆதாரங்களையும் நிச்சயமாகக் கலைத்துவிடுவார் என்று திட்டவட்டமாக வாதிட்டனர்.

நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

அன்பில் மகேஷைநவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்விதித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடல்நலக் காரணங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு முதல் வகுப்பு சிறை மற்றும் பிரத்யேக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்பில் மகேஷின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டும் பின்வரும் சலுகைகளை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

முதல் வகுப்பு (Class 1) சிறை என்றால் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள முதல் வகுப்பு சிறை வசதி என்பது சாதாரண சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்படும் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். புதிய தலைமுறை செய்தியாளர் சுப்பையா அளித்த விரிவான தகவலின்படி, முதல்

வகுப்பு சிறையில் கிடைக்கக்கூடிய வசதிகள்:

தனி அறை வசதி: பொதுவான கைதிகளோடு அடைக்கப்படாமல், கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை (Single Room) ஒதுக்கப்படும். சொந்த ஆடைகள்: சிறைச்சாலையின் சீருடையை அணிய வேண்டிய கட்டாயமில்லை; வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் சொந்த ஆடைகளை உடுத்திக் கொள்ள அனுமதி உண்டு. நாளிதழ் மற்றும் புத்தகங்கள்: தினசரி நாளிதழ்களைப் பெற்று வாசிப்பதற்கும், அறிவுசார் புத்தகங்களைப் படிப்பதற்கும் சிறை விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும். தொலைக்காட்சி வசதி: சிறை வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பொதுவான இடங்களில் தொலைக்காட்சி பார்க்கும் வசதி உண்டு. மருத்துவக் கண்காணிப்பு: நோய் பாதிப்பு உள்ளவர்களுக்குத் தனி மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் தேவையான படுக்கை வசதிகள் செய்து தரப்படும். பார்வையாளர்கள் சந்திப்பு: வழக்கறிஞர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உரிய அனுமதியுடன் சந்தித்துப் பேசுவதற்குச் சாதாரண கைதிகளைவிடச் சற்று கூடுதல் நேரம் மற்றும் வசதிகள் கிடைக்கும். (குறிப்பு: குளிரூட்டப்பட்ட ஏ.சி. வசதிகள் போன்ற சொகுசு வசதிகள் எதுவும் இருக்காது).

Source link