நாளை கரையை கடக்கிறதா அர்னாப் புயல்- மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசும் காற்று – டெல்டா வெதர்மேன் அப்டேட் – delta weatherman update arnab cyclone make landfall tomorrow with wind speeds of 160 km

அர்னாப் புயலின் கண் திறந்தது ஏற்கெனவே மிகக் கடுமையான புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறாது. மேலும் புயலின் கண் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் புயல் மச்சிலிப்பட்டினத்திலிருந்து கிழக்கே சுமார் 280 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

ஒரே நாளில் கடுமையாக வலுப்பெற்ற புயல்

அர்னாப் புயல் நேற்று அக்டோபர் 26 ஆம் தேதி காலை 5:30 மணிக்கு உருவானது. அதனைத் தொடர்து மாலை 5:30 மணிக்கு தீவிரப் புயலாக வலுப்பெற்றது. அதே நாள் இரவு 11:30 மணிக்கு மிகக் கடுமையான புயலாக மேலும் வலுப்பெற்றது. வெறும் 18 மணி நேரத்தில் அர்னாப் புயல், புயல் நிலையிலிருந்து தீவிரப் புயலாகவும், பின்னர் மிகக் கடுமையான புயலாகவும் வேகமாக வலுப்பெற்றுள்ளது.

மேலும் தீவிரம் அடைகிறதா?

புயல் உருவான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதன் கண் திறந்துள்ளது.புயல் நாளைதான் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அது மேலும் வலுப்பெற்று அதி தீவிரப் புயலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது.

மணிக்கு 160 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

அக்டோபர் 28ஆம் தேதி முற்பகலில், காக்கிநாடா அருகே, விசாகப்பட்டினம் மற்றும் பாபட்லா இடைப்பட்ட பகுதியில், மிகக் கடுமையான புயலாகவோ அல்லது அதைவிட அதிக தீவிரத்துடனோ கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில், கரையைக் கடக்கும் பகுதியை ஒட்டிய இடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தைக் கடக்கும் புயல் காற்று வீசக்கூடும். மேலும், மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவ மக்களுக்கு எச்சரிக்கை

மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் குறிப்பாக, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம், பாபட்லா, காக்கிநாடா கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தமிகத்தில் வானிலை நிலவரம்

இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என கூறப்படுகிறது. இன்று நண்பகல் முதல் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. அர்னாப் புயல் கிழக்குத் திசைக் காற்றைத் தன்னுடன் இழுத்துச் செல்வதால், தமிழகத்தில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து, மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

ஆனால் நேற்று கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு உள்மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பள்ளிகலுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர்கள் உத்திவிட்டனர்.

Source link