பி.டி.அரசகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி ஜனனியும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடந்து திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ். அப்போதைய காலகட்டத்தில் தமிழக முழுவதும் சுமார் 117 பள்ளிகள் இடம் அரசு அங்கீகாரம் பெற்று தருகிறோம். உங்கள் கல்வி நிறுவனத்தின் தயரத்தை உயர்த்தி தருகிறோம் என்று கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் ஆகி பரபரப்பு கிளப்பியது.
திமுக ஊழல் வழக்குகளை தூசித்தட்ட ஆரம்பித்த தவெக அரசு
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து,தவெக ஆட்சி அமைந்ததும் திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்குகளில் தூசி தட்ட ஆரம்பித்தது. குறிப்பாக சட்டசபையில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கி தருவதாக கூறி பல மோசடிகள் நடந்ததாக அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பிறகுதான் இந்த வழக்கில் அரசு தீவிரம் காட்ட ஆரம்பித்தது. காவல்துறையின் விசாரணையில் திமுக பிரமுகர் பி.டி .அரசகுமார் ,முத்துக்குமார் உள்ளிட்டோர் மோசடி வழக்கில் முக்கிய புள்ளியாக இருந்தது தெரியவந்தது. முத்துக்குமார் தலைமறைவானார்.இதன் பின்னணியில் திமுக முக்கிய புள்ளிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை விரிவடைய ஆரம்பித்தது.
அன்பில் மகேஷ் கைது விவகாரம்
பிடி அரசகுமார் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.அப்போது இந்த வழக்கில் அன்பில் மகேஷுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் திருச்சி, சென்னை என அன்பில் மகேஷுக்கு வீடு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் முக்கிய ஆணவங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணையில் 240 கேள்விகள் கேட்கப்பட்டதாக விசாரணைக்கு பின்னர் அவரே தெரிவித்து இருந்தார். இதே வழக்கில் போலீஸ் மிகவும் தீவிரமாக தேடி வரும்முத்துக்குமார், அன்பில் மகேஷின் பள்ளி நண்பர். 2011-ல் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, விருத்தாசலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.வாக இருந்தவர். பின்பு திமுகவில ஐக்கியமாகி அன்பில் மகேஷுக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். பிடி அரசகுமார் நடத்தி வந்த அந்த மோசடி சங்கத்தின் பொருளாளராக இருந்த முத்துக்குமாருக்கு இவருக்கு எதிராகத்தான் போலீஸ் லுக் அவுட் நோட்டீஸும் வெளியிட்டு உள்ளது. இதற்கிடையே,குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள பி டி அரசகுமாரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.
முன் ஜாமீனை தள்ளுப்படி செய்த நீதிமன்றம்
இதன் அடிப்படையில் தான் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டது. பின்னர் கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டியது. இவ்வழக்கில் கைதாவதைத் தவிர்க்கும் பொருட்டு, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், “வழக்கின் விசாரணை ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளதாலும், கோடிக்கணக்கிலான பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாலும், அவர் அமைச்சராக இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்கக்கூடும்” எனக் கூறி அவரது முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் பின்னணி தகவல்கள்
அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பான அடுத்தடுத்த திருப்பங்கள் மற்றும் விசாரணை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன அன்பில் மகேஷிற்கு நீதிமன்றம் சார்பில் வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.காவல் காலம் நிறைவடைந்ததும் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இதற்கிடையே, வரும் நவம்பர் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் இவருக்கான நீதிமன்ற விசாரணை வரவுள்ளது. இவ்வழக்கில் அன்பில் மகேஷின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அரசு தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தின்படி, பள்ளிகளிடம் லஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதி அன்பில் மகேஷின் மனைவி ஜனனியிடம் வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அவரும் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது
Source link
