அன்பில் மகேஷ் கைதின் போது சிறைவாசலில் சர்ச்சை பேச்சு – யார் அந்த திமுக கவுன்சிலர் – controversial speech outside the prison gates during the arrest of anbil mahesh – who is that dmk councilor

“கரூர்லயே போட்ருக்கணும்” புழல் சிறை முன் தவெகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக கவுன்சிலரின் பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட போது, சிறை வாசலில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபர் வேலூர் மாநகராட்சி 12-வது வார்டு திமுக கவுன்சிலர் ‘டீட்டா’ சரவணன் ஆவார்.

தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் பண மோசடி செய்த புகாரில் அன்பில் மகேஷ் நேற்று(அக்.26-ல்) கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட போது, சிறை வாசலில் திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களில் ஒருவரான திமுக கவுன்சிலர், தமிழக முதல்வர் மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசை மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.

“அன்னைக்கே கரூர்ல விஜய்யை போட்டிருந்தா?”

அன்னைக்கே கரூர்ல விஜய்யை போட்டிருந்தா (முடித்திருந்தால்) இந்த நிலைமை வந்திருக்குமா?” என்று திமுக கவுன்சிலர் பேசிய ஆடியோ/வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சர்ச்சைப் பேச்சு தொடர்பாக கவுன்சிலர் டீட்டா சரவணன் மீது காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்பொழுது தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

ஜாமினில் வெளிவந்துள்ள அரசகுமார்

தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட அரசகுமார்மீது, 100 நாட்களாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.அரசகுமார் மீது குற்றம் நிரூபிக்க முடியாத இந்த வழக்கில் தான், அவர் வாங்கியதாக கூறப்படும் பணத்தை அன்பில் மகேஷிடம் கொடுத்ததாக இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை வரை சென்று இருப்பதாகவும், இந்த வழக்கு நிற்காது என்று திமுக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

எந்த கேள்விக்கும் காவல்துறையிடம் விடை இல்லை

மேலும் தனியார் பள்ளிகள் உரிமம் பெற பணம் கொடுத்தது யார், வாங்கியது யார், பார்த்த Witness யார்? அதை இன்னொருவரிடம் கொடுத்ததாக கூறியது யார் என்று திமுக வழக்கறிஞர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பணம் பெற்ற அந்த பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டதா? அப்படி வழங்கப்பட்ட அனுமதிகள் முறைகேடானது எனில் அவை ரத்து செய்யப்பட்டதா? அப்படி ரத்து செய்யப்பட்ட பள்ளிகள் எத்தனை? என எந்த கேள்விக்கும் காவல்துறையிடம் விடை இல்லை என்று திமுக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

Source link