பராமரிப்பு பணி: கோவை-சொரனூர் ரெயில் இன்று ரத்து

திருப்பூர்,

பாலக்காடு-சொரனூர் இடையே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை எளிதாக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

அதன்படி, சொரனூர்-கோவை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.56604) சொரனூரில் இருந்து இன்று காலை 8.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் முழுமையாக ரத்து செய் யப்பட்டுள்ளது. கோவை-சொரனூர் எக்ஸ்பிரஸ் (56603) கோவையில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயிலும் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திருப்பத்தூர்-சேலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள தொட்டம்பட்டி ரெயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளை எளிதாக்கும் வகையில் குறிப்பிட்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.18190) எர்ணாகுளத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) புறப்பட்டு, மொரப்பூர் ரெயில் நிலையத்தில் 1 மணி நேரம் நிறுத்தப்படும். ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352) ஆழப்புழாவில் இருந்து நாளை புறப்பட்டு மொரப் பூர் ரெயில் நிலையத்தில் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

Source link