தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நேரத்தில் வெளியே செல்ல தடை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை விதித்துள்ளது. மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் (CEO) கடந்த அக்டோபர் 22, 2026 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை, தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஒரு முன்மாதிரி உத்தரவாக அமல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய விவரங்கள்:
பள்ளி நேரத்தில் வெளியே செல்ல தடை: தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு பள்ளியிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளி வேலை நேரத்தில் வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது. இந்தத் தடையானது மதிய உணவு இடைவேளைக்கும் (Lunch Break) பொருந்தும் எனத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. அசாதாரண நிகழ்வுகளுக்கு உடனடி தகவல்: பள்ளி வளாகத்தில் ஏதேனும் அசாதாரண சம்பவங்களோ அல்லது பிரச்சினைகளோ ஏற்பட்டால், தலைமை ஆசிரியர்கள் தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது. அதுகுறித்த தகவலை உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) அல்லது முதன்மைக் கல்வி அலுவலருக்கு (CEO) தெரிவித்து, மேலிடத்து ஆலோசனையைப் பெற்ற பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கல்வித்துறை வட்டாரங்கள் ஆலோசித்து வருகின்றன. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளிகளின் ஒழுங்குமுறையை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
Source link
