சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2026ம் ஆண்டிற்கான மண்டல மகரவிளக்கு பூஜைகள் நவம்பர் 16ம் தேதி அன்று துவங்க உள்ளது. கார்த்திகை முதல் தேதியான நவம்பர் 17ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கான ஆன்லைன் புக்கிங் துவங்கும் தேதி, தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை, ஸ்பாட் புக்கிங் உள்ளிட்ட விபரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை 2026 மண்டல மகரவிளக்கு பூஜைக்கான அறிவிப்புகள் :
– 2026ம் ஆண்டு மண்டல மகரவிளக்கு பூஜைகளின் போது சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக சபரிமலை வரும் பக்தர்களுக்கான ஆன்லைன் புக்கிங் நவம்பர் 29ம் தேதி காலை 10 மணிக்கு துவங்க உள்ளது.
– பக்தர்கள் தங்களுக்கான தரிசன நேரத்தை, ஆதார், மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை பதிவேற்றம் செய்து http://www.sabarimalaonline.org என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
– ஆன்லைன் மூலம் புக்கிங் செய்த பக்தர்களில் நிலக்கல் – பம்பை வழியாக தினசரி அதிகபட்சமாக 60,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
– நிலக்கல், எருமேலி,வண்டிபெரியாறு சத்திரம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய முடியும். ஐகோர்ட் வழிகாட்டுதலின் படி பம்பையில் ஸ்பாட் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
– ஆன்லைன் புக்கிங் செய்தவர்களில் எருமேலி காட்டுப்பாதை மற்றும் வண்டிப்பெரியாறு சத்திரம் வழியாக தினசரி 3000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
– நிலக்கல் ஸ்பாட் புக்கிங் மையத்தில் தினமும் 10,000 பக்தர்களும், எருமேலி மற்றும் வண்டிப்பெரியாறு சத்திரம் மையங்களில் தினமும் 2000 பேர் மட்டுமே தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.
– ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கான பாதைகள் மற்றும் ஸ்பாட் புக்கிங் செய்தவர்களுக்கான பாதைகள் ஆகியவற்றை சேர்த்து தினமும் 80,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
– ஆன்லைனில் தரிசன புக்கிங் செய்வது முற்றிலும் இலவசம். அதே சமயம் பக்தர்கள் விருப்பப்பட்டால் ரூ.5 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை பக்தர்கள் நிவாரண நிதியாகவும், பொது நிதியாகவும் வழங்கலாம். இந்த தொகை சபரிமலை தூய்மையை பாதுகாக்கும் பணிக்காக பயன்படுத்தப்படும். நிதி செலுத்துவது கட்டாயம் கிடையாது.
ஆன்லைன் புக்கிங்கிற்கு தேவையானவை :
– தற்போது பயன்பாட்டில் இருக்கும் மொபைல் எண், இமெயில் முகவரி, ஏதாவது ஒரு அடையாள சான்று கையில் வைத்திருக்க வேண்டும்.
– ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை வைத்திருக்க வேண்டும்.
– தெளிவாக இருக்கும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மொபைல் எண் ஆகியவற்றை பயன்படுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் புக்கிங் செய்யும் முறை :
– முதல் முறையாக சபரிமலை செல்பவர்கள் http://www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் சென்று, Register என்பதை கிளிக் செய்து பெயர், மொபைல் எண், இமெயில் முகவரி ஆகியவற்றை கொடுத்து, பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும்.
– உடனடியாக உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை பதிவிட்டால் இணையதளத்திற்கு செல்லலாம்.
– ஏற்கனவே முன்பதிவு செய்து, முந்தைய வருடங்களில் சென்றவர்கள் மொபைல் எண், பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே சென்று முன்பதிவு செய்யலாம்.
– Login செய்து உள்ளே சென்ற பிறகு உங்களை பற்றிய விபரங்களை அளிக்க வேண்டும்.
– அடையாள ஆவணம், மொபைல் எண், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
– பிறகு தரிசன முறையை சேர்வு செய்து, அங்கு தெரியும் காலண்டரில் பச்சை நிறத்தில் காட்டப்படும் தேதிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, தரிசன தேதியை முடிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை அது சிவப்பு நிறத்தில் இருந்தால், அந்த நாளில் புக்கிங் நிறைவடைந்து விட்டது என்று அர்த்தம்.
– தரிசன தேதியை தேர்வு செய்த பிறகு, தரிசன நேரம் காலையா அல்லது மாலையா என்பதை தேர்வு செய்து, நேரத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
– நீங்கள் சபரிமலைக்கு, அதாவது எருமேலி அல்லது பம்பை என எந்த வழியாக செல்ல போகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
– உங்களுடன் இணைந்து வரப் போகும் பக்தர்கள் குறித்த விபரங்களை சேர்த்து புக்கிங் செய்ய வேண்டும்.
– அனைத்து விபரங்களை பதிவேற்றிய பிறகு, ஒரு முறை சரிபார்த்து விட்டு, Submit அல்லது Confirm Booking பட்டனை கிளிக் செய்ய வேண்டும். முன்பதிவு ஆகி விட்டது என்றால் QR code உடன் இருக்கும் தரிசன பாஸ் தெரியும்.
– அந்த டிக்கெட் பாசை PDF வடிவில் உங்களின் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தரிசனத்தின் போது இது பயன்படும்.
