அர்ஜுன் மகள் அஞ்சனா–ஐசையா நட்டர் காதல் கதை: 14 ஆண்டுகால காதல் பயணம்!

அஞ்சனா அர்ஜுன் திருமணம் , காதல்: நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனாவுக்கும், காதலர் ஐசையா நட்டருக்கும் அக்டோபர் 19ம் தேதி இத்தாலியில் திருவிழா மாதிரி திருமணம் நடந்தது. மாப்பிள்ளை கிறிஸ்தவர் என்பதால் அவர் மத முறைப்படி ஒரு முறையும், மணமகளுக்காக இந்து முறைப்படியும் என இரண்டு முறை திருமணம் நடந்தது.

திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை தற்போது தான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்கள் அர்ஜுன் குடும்பத்தார். இந்நிலையில் அஞ்சனா அர்ஜுனின் காதல் கதையை தெரிந்து கொள்ளலாம். அவர் அமெரிக்காவுக்கு படிக்கச் சென்றபோது ஐசையா நட்டரை சந்தித்தார். இருவரும் சேர்ந்து படித்த போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

அர்ஜுன் மருமகன்: 14 ஆண்டுகளாக காதலித்த பிறகே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். என் மருமகன் ஐசையா அமெரிக்கர். மகளும், அவரும் படிக்கும் போதில் இருந்து காதலித்தார்கள் என்று அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்தார் அர்ஜுன். இந்நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யா அவங்க அம்மா மாதிரி என்றும், அஞ்சனா தன்னை போன்று குணம் கொண்டவர் என்றும் கூறியிருக்கிறார் அர்ஜுன்.

ஆக்ஷன் கிங்கிற்கு மகன் இல்லை. இந்நிலையில் தன் மகள்கள் ஐஸ்வர்யா, அஞ்சனாவை திருமணம் செய்திருக்கும் மருமகன்கள் உமாபதி ராமையா, ஐசையாவை மருமகன்களாக இல்லை மகன்களாவே பார்க்கிறார்.

அர்ஜுன் நெகிழ்ச்சி: மகளின் திருமண புகைப்படங்களை நேற்று வெளியிட்டு இன்ஸ்டாவில் அர்ஜுன் கூறியதாவது, இன்று என் மனசு நிறைந்துவிட்டது. என் மகள் தனக்கேற்றவரை கண்டுகொண்டுவிட்டார். நான் ரொம்பப் பெருமைப்படுகிறேன். என் மகள் அஞ்சனா, என் அருமை மருமகன் ஐசையா, உங்களின் காதல் மேன்மேலும் அதிகரிக்கட்டும். எங்கள் குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறேன் மகனே என்றார்.

உமாபதி ராமையா எங்கே ?: அர்ஜுன் தன் மகளுக்கு அதுவும் இத்தாலியில் என்ன அழகாக திருமணம் செய்து வைத்திருக்கிறார் என்று ரசிகர்கள் பெருமையாக பேசுகிறார்கள். அதே சமயம் அந்த திருமண புகைப்படங்களில் மூத்த மருமகன், அதாவது ஐஸ்வர்யா அர்ஜுனின் கணவரான உமாபதி ராமையா இல்லை. உமாபதி இல்லாமல் திருமணம் நடந்திருக்கிறதே. அவர் ஏன் கல்யாணத்திற்கு வரவில்லை என்று அர்ஜுனிடம் சமூக வலைதளங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
மச்சினி கல்யாணத்திற்கு உமாபதி ராமையா ஏன் வரவில்லை என்று சினிமா ரசிகர்களாக யூகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு நல்லது நடந்திருக்கும்போது அதை விட்டுவிட்டு வராதவரை பற்றி யூகிப்பது சரியல்லவே.

முன்னதாக அஞ்சனாவின் திருமண நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடந்தபோது அதில் தன் மனைவியுடன் கலந்து கொண்டார் உமாபதி ராமையா. தற்போது அர்ஜுனின் இன்ஸ்டா போஸ்ட்டில் மனைவி, மூத்த மகளின் பெயர் இருக்கிறது. ஆனால் மூத்த மருமகனின் பெயர் மட்டும் ஏன் இல்லை ஆக்ஷன் கிங் என்றும் ரசிகர்கள் கேட்கிறார்கள். உமாபதி ராமையா அல்லது அர்ஜுன் விளக்கம் அளிக்கும் வரை இந்த பேச்சு ஓயாது போன்று.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அர்ஜுன் மகள்கள்: ஐஸ்வர்யா அர்ஜுன் தன் பெற்றோர் வழியில் படங்களில் நடிக்க வந்துவிட்டார். அஞ்சனாவோ சொகுசு ஹேன்ட்பேக் விற்பனை செய்யும் Sarjaa நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஐசையா நட்டர் என்ன வேலை செய்கிறார் என்று உறுதியான தகவல் எதுவும் இல்லை. ஆனால் 14 வருட காதலை அஞ்சனா அர்ஜுன் இன்ஸ்டாவில் உறுதி செய்திருக்கிறார்.

Source link