காணொளிக் குறிப்பு,
காணொளி: ஊழல் வழக்கில் கைது – அன்பில் மகேஷ் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது 27 அக்டோபர் 2026, 06:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை அமிஞ்சகரையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணைக்குப் பிறகு, அவரை நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
