தமிழக முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பொதுப்பணித்துறை மற்றும் கனிம வனத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், மூன்று துறை குறித்த ஊழல் ஃபைல்கள் நிதியமைச்சர் என்னுடைய மேஜையின் மீது வைத்துள்ளார். அதனை திறக்க வைத்து விடாதீங்க.. அப்புறம் இடைத்தேர்தலிலாவது அவங்களுக்கு நல்லது நடக்கும் என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது,ஆதாரம் இருந்த நடவடிக்கை எடுங்க.. ஃபைல்களை திறக்க சொல்லுங்க..என்று முதல்வருக்கு திமுகவினர் சவால் விடுத்து வந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை ஈடுபட்டு வருகிறது.அதன்படி, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி சுமார் 100 கோடி லஞ்சம் பெற்றதாக தான் புகார் எழுந்த குற்றச்சாட்டில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில்மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜயிடம் இருக்கும் 3 ஃபைல்
தற்போது முதல்வர் விஜயிடம் இருக்கும் 3 ஃபைல்களில் இதுவும் ஒன்றா என சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில்,இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில்,ஒரே ஒரு File Open பண்ணதுக்கே ஒரு அமைச்சர் கைது செய்யபட்டிருக்கிறார் Open பண்ணுங்க… Open பண்ணுங்கனு சொன்னாங்க.. இப்போதைக்கு ஒரு File தான் முதலமைச்சர் Open பண்ணி இருக்காரு என்று கூறினார். இந்த நிலையில், மீதமுள்ள 2 ஃபைல் எது? திமுக முன்னாள் அமைச்சர்கள் யாரெல்லாம் சிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவையில் குறிப்பிடப்பட்ட அந்த 2 முக்கியக் கோப்புகளும் திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சர்களாகப் பணியாற்றிய துரைமுருகன்,எ.வ.வேலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சம்பந்தப்பட்டவை தான் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
விசாரணையில் எ.வ. வேலு .. அடுத்து யார்?
கடந்த திமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் ஏ.வ.வேலு. அண்மையில் நெடுஞ்சாலைத் துறையில் சுமார் ரூ. 3.23 கோடி ஊழல் முறைகேடு நடந்ததாகக் கூறி,மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இது கடந்த ஆட்சியில் தென் மாவட்டங்களில் செயல்பட்ட அனைத்து கிராவல், சவடு மற்றும் கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல நூறு மடங்கு கனிமங்களைக் அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதன் மூலம் அரசுக்கு சுமார் ₹1,000 கோடிக்கும் மேலாக வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதன்பிறகு, ஒருபுறமிருக்க கனிமவளத்துறைக்கு ஆரம்பத்தில் அமைச்சராக இருந்தவர் துரைமுருகன். திமுக சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி தான் 2025 வரை கனி்மவள அமைச்சராக செயல்பட்டார். இந்த ஊழல்களுக்கெல்லாம் முதன்மைக் காரணமாகவும், அதிகார மையமாகவும் விளங்கிய அன்றைய கனிமவளத்துறை அமைச்சர்களான துரைமுருகன் மற்றும் ரகுபதி ஆகியோர் மீது வெளிப்படையான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கனிமவளக் கொள்ளை வழக்கில் தீவிரம் காட்டும் தவெக
கனிமவளக் கொள்ளையை முற்றிலும் தடுத்து நிறுத்தினால், அரசுக்கு ஆண்டுக்கு ₹50,000 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும். மதுபானம் மற்றும் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயை விட கனிமவளத்தில் அதிக வருவாய் ஈட்ட முடியும். ஆனால், இந்த ₹50,000 கோடியும் தனியார் மாஃபியாக்களின் சட்டைப் பைகளுக்குத்தான் சென்றுள்ளது. போலி ரசீது தயாரித்து அரசு கஜானாவைக் கொள்ளையடித்த ராஜப்பா, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, செந்தில் பாலாஜி மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கும் நிலுகையில் உள்ளது. தற்போது இந்த வழக்கில் தவெக அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
