வாகன பயணம் எந்த விதமான பிரச்சனையும், தடைகளும் இல்லாமல் நிறைவு பெற வேண்டும் என்று தான் அனைவரும் நினைத்து, வாகனங்களில் செல்கிறோம். ஆனால் எவ்வளவு தான் கவனமாக சென்றாலும் சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும், விபத்துக்களால் காயம், தடைகள், பிரச்சனைகள் ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இது போன்ற வாகன பயணங்களில் பிரச்சனைகள், விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சில எளிமையான வழிபாடுகள் மந்திரங்களை பயணங்களை துவங்குவதற்கு முன்பும், பயணங்களின் போதும் சொல்லுவது நல்லது.
விபத்துக்களை தவிர்க்க வணங்க வேண்டிய தெய்வம் :
விபத்தின் போது ஆபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்ளவும் விநாயகர், கால பைரவர், அனுமன், செவ்வாய் பகவான் ஆகியோரை வழிபடலாம். பொதுவாகவே வீட்டில் இருந்து வெளியில் புறப்படுவதற்கு முன் நம்முடைய குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்கி விட்டு செல்வதால் பாதுகாப்பாவும், செயல்களில் தடை இல்லாமலும் போகும் காரியம் நல்ல படியாக முடியும். அதே போல் ஸ்ரீ சுகபிரம்மரையும் வழிபடுவது சிறந்தது. பயணங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவும், தடையின்றியும் அமையும். பயணம் தொடங்கும் முன் இறைவனை மனதார நினைத்து சில மந்திரங்களை சொல்லி வழிபடுவது நன்மையை தரும்.
யார் இந்த சுகபிரம்மர்?
சுகபிரம்மர், சுக மகரிஷி அல்லது சுகதேவர் என்பவர் இந்து புராணங்களின்படி மகாபாரதம் மற்றும் 18 புராணங்களைத் தொகுத்த வேத வியாசரின் புதல்வர் ஆவார். சதா சர்வ காலமும் பிரம்ம நினைப்பிலேயே, அதாவது ஆத்ம ஞானத்தில் லயித்திருந்ததால் இவர் ‘சுகபிரம்ம மகரிஷி’ என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் ‘சுகம்’ என்றால் ‘கிளி’ என்று பொருள். இவர் மனித உடலும் கிளி முகமும் கொண்டவராகக் காட்சி தருபவர். அதனால் இவரை சுகபிரம்மர் என அழைக்கிறோம்,
வாகனம் ஓட்டும் போது சொல்ல வேண்டிய மந்திரம் :
1. “ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ அங்காரகாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ குஜாய
ஓம் நமோ மங்கனாய
ஓம் நமோ மங்கனாய
ஓம் நமோ மங்கனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாய
ஓம் நமோ வாகனாதிபதயே
ஓம் நமோ வாகனாதிபதயே
ஓம் நமோ வாகனாதிபதயே
ஓம் நமோ ராகவே
ஓம் நமோ ராகவே
ஓம் நமோ ராகவே”
2. “ஓம் ஸ்ரீ சுகப்பிரம்மதேவாய நமோ நமஹ “
3. “ஓம் சுகதேவாய நமஹ”
4. “ஓம் நமோ சுக தேவாய நமஹ”
5. “ஓம் ஷம்போ மகாதேவ தேவ, ஷம்போ மகாதேவ தேவ – நமோ மார்க்க பந்தவே”
6. அனுமன் பீஜ மந்திரம் :
“ஓம் ஐம் ப்ரீம் ஹனுமதே ஸ்ரீ ராமா தூதாய நமஹ”
7. முருகப் பெருமான் மற்றும் சித்தா மந்திரம்:
“ஓம் ஸ்ரீ அகஸ்திய விநாயகா கணேசாய நமஹ. ஓம் சிவ சிவ ராம் ராம் ஓம்.”
