கங்குவா திஷா: பெரும்பாலும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் திஷா பதானி சிறுத்தை சிவா இயக்கத்தில் தி ஒன் சூர்யா நடித்த கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.தெலுங்கு படங்களில் எல்லாம் நடிக்கிறீர்களே, தமிழுக்கு வர மாட்டீர்களா என கோலிவுட் ரசிகர்கள் கேட்ட நிலையில் கங்குவா மூலம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தார். ஆனால் கங்குவா படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதன் பிறகு திஷா பதானி எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
காஸ்ட்லி தண்ணீர்: இந்நிலையில் திஷா பதானி குடிக்கும் தண்ணீர் பற்றி தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசி வருகிறார்கள். யாரும் குடிக்காத தண்ணீரையா அவர் குடிக்கிறார் என்றால் ஆம் என்று கூட சொல்லலாம். பாட்காஸ்ட் ஒன்றில் திஷா பதானி கூறியதாவது, நான் Bling H2O தண்ணீர் குடிக்கிறேன், வாரத்தில் 5 முறை அந்த தண்ணீரை குடிக்கிறேன் என்றார்.
750 மி.லி. கொண்ட அந்த Bling H2O தண்ணீர் பாட்டிலின் விலை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 28 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வாரத்திற்கு ஐந்து பாட்டில் என்றால் அதற்கு மட்டும் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் செலவாகும். அப்படி என்றால் ஒரு வருடத்திற்கு அடேங்கப்பா நினைத்தாலே தலை சுற்றுகிறதே என்கிறார்கள் ரசிகர்கள்.
ஃபிட்னஸில் அதிகம் கவனம் செலுத்தும் திஷா பதானி மாதிரி உடல்வாகு வர அவர் என்ன சாப்பிடுகிறார், என்ன குடிக்கிறார் என்பதை யாராச்சும் தெரிந்தால் சொல்லுங்களேன் என ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். இந்நிலையில் அவர் குடிக்கும் தண்ணீர் விபரத்தை கேட்டவுடன் ஒரு நிமிடம் தலையே சுற்றிவிட்டதாக கூறுகிறார்கள்.
திஷா விளம்பரம் செய்யும் நீர்: தண்ணீருக்கே வாரத்திற்கு ரூ. 1.5 லட்சத்திற்கு எங்கு போவது?. எங்களுக்கு திஷா பதானி மாதிரி பாடி வேண்டாம், நாங்கள் சாதாரண தண்ணீரையே குடித்துக் கொள்கிறோம் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். தான் Bling H2O குடித்தாலும் லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கும் ஸ்மார்ட் வாட்டரை விளம்பரம் செய்து வருகிறார் திஷா பதானி.
Bling H2O குடிக்காதபோது ஸ்மார்ட் வாட்டர் தான் குடிக்கிறார் போன்று. திஷா மாதிரி குடிநீருக்காக லட்சக் கணக்கில் செலவு செய்ய நாங்கள் அந்த அளவுக்கு சம்பாதிக்கவில்லை என்பதே சமூக வலைதளவாசிகள் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து வரும் Bling H2O தண்ணீர் என்று ஒன்று இருப்பதே திஷா பதானி சொல்லித் தான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
திஷா பதானி வருமானம்: திஷா பதானி படங்கள் தவிர்த்து விளம்பர படங்களில் நடிப்பதுடன், கடை திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு சம்பாதிக்கிறார். ஆண்டு முழுவதும் பிசியாக உழைத்துக் கொண்டிருக்கும் அவர் தனக்கு பிடித்த விலை உயர்ந்த தண்ணீரை குடிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர் பணம், அவர் செலவு செய்கிறார்.
இதற்கிடையே சிலரோ, முன்பெல்லாம் அடிக்கடி ஜிம்மில் இருந்து ஒர்க்அவுட் வீடியோ வெளியிடுவீர்களே, தற்போது ஜிம் வீடியோக்கள் வருவதே இல்லையே ஏன் என்று திஷா பதானியிடம் கேட்டிருக்கிறார்கள். திஷா ஒர்க்அவுட் செய்வதை பார்த்தால் இன்ஸ்பையரிங்காக இருப்பதாக கூறுகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
கெரியரை பொறுத்தவரை திஷா பதானி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஆவாராபன் 2. கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் சூப்பர் ஹிட்டானது.
Source link
