நவம்பர் மாத ராசி பலன் 2026: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
நவம்பர் 2026 மாதத்தில் சில முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. இந்த மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், புதன் , சூரியன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள் காரணமாகவும், சில கிரகங்களின் சேர்க்கை மூலமாக பல்வேறு யோகங்கள் உருவாகும் உள்ளன. மேலும் இந்த மாதத்தில் தீபாவளி பண்டிகை, கோவர்தன பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வருகின்றன. இந்த மாதத்தில் அமைப்பின்படி எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
ஜோதிடர் இறுதியாக நவம்பர் 2026 ஆம் ஆண்டில் சில கூடிய சில முக்கிய கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில் 12 ராசிகள் மீது தாக்கங்கள் ஏற்படக்கூடியதாக இருக்கும். குறிப்பாக இந்த மாதத்தில் சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் பின்னோக்கி நகரக்கூடிய வக்ர நகர்வை மேற்கொள்ள உள்ளன. அதே போல குரு அதிசாரமாக கடகத்திலிருந்து சிம்ம ராசியில் நுழைவார்.
மேலும் தொடக்கத்தில் துலாம் ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடக்க உள்ளன. மாதத்தின் நடுவில் சிம்ம ராசியில் குரு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கைகள் உண்டாக உள்ளன. இது போன்ற கிரக மாற்றங்கள் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை தந்தாலும், சிலர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய காலமாக அமையும். எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
ரிஷபம் நவம்பர் மாத ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு நவம்பர் மாதத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். உங்களுடைய வசதிகள், ஆடம்பரங்கள் குறையும். அன்றாட வழக்கங்களை செய்து முடிக்க சிரமங்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு.
நீங்கள் மேற்கொள்ளக்கூடிய வேலை அல்லது தொழில் தொடர்பாக கூட்டணி வைத்து செயல்படுபவர்கள் முடிவு எடுப்பதில் சிரமங்களை சந்திப்பார்கள். நினைத்த செயலை முடிக்க கவனமும், இணைந்த செயல்பாடு அவசியம். வேலை தொடர்பாக கூடுதல் அர்ப்பணிப்பு தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமையை சந்திக்க நேரிடலாம்.
குடும்ப உறவில் சில சங்கடம் தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கலாம். காதல் உறவில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். நிதானமாகவும் இனிய சொற்கள் உறவையும் மேம்படுத்தும்.
மிதுனம் நவம்பர் மாத ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த மாதத்தில் உங்களுடைய செயல்பாடுகளில் வெற்றி கிடைக்க மன தைரியம் தேவைப்படும். உங்கள் வேலைகளை சிரமங்களையும், தாமதங்களையும் சந்திக்க வாய்ப்பு உண்டு. அதனால் உங்களுடைய வேலைகளை சரியான திட்டங்களுடன் முடிக்கவும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து வாய்ப்புகளை எடுத்துக் கொள்ளவும்.
உங்களுடைய வேலை, தொழிலில் முன்னேற்றமும் கிடைக்க அன்றாட விளக்கங்களை, திட்டங்களை மேம்படுத்தவும். மாதத்தின் பிற்பகுதியில் உங்களுடைய முடிவெடுக்கும் விஷயங்களில் குடும்பத்தினரின் உதவி கிடைக்கும்.
காதல் அல்லது திருமண உறவில் துணையின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். மேலும் நீங்கள் நினைப்பதை வெளிப்படுத்த சிரமப்படுவீர்கள். மற்றவர்களால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உடல் மற்றும் மன தைரியத்தை அதிகரிக்க வேண்டிய மாதம்.
கடகம் நவம்பர் மாத ராசி பலன்
கடக ராசி சேர்ந்தவர்களுக்கு சற்று சாதகமற்ற காலமாக அமையலாம். உங்களுடைய உறவுகளை பராமரிப்பதிலும், வேலைகளை செய்து முடிப்பதற்கும் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
நவம்பர் மாதத்தில் உங்களுடைய காதல் விஷயங்களிலும், சுயம் முன்னேற்றம் தொடர்பாக அதிகம் சிந்திக்க நேரிடும். இதனால் மகிழ்ச்சியான தருணங்கள் கூட, மனக்கவலையில் செலவிடுவீர்கள். இந்த மாதத்தில் உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்து, நிதானமான சிந்தனையும், உங்களுக்கு பிடித்தமான செயல்களில் நேரம் செலவிடவும். குடும்ப வாழ்க்கையில் சில குற்ற உணர்ச்சி உங்களுடைய செயலை சுதந்திரமாக செய்ய விடாமல் தடுக்கலாம்.
தொழில் செய்யக்கூடியவர்கள் ஆக்கபூர்வமான சிந்தனையுடன் செயல்பட்டால் புதிய வாய்ப்புகள் திறக்கும். புதிய திறன் வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய யோசனைகளையும் செயல்படுத்த நினைப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். முடிந்த வரை உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செல்ல விட முயற்சி செய்யவும்.
கன்னி நவம்பர் மாத ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். உங்களுடைய விரய ஸ்தானத்தில் மூன்று கிரக சேர்க்கையும், உங்கள் ராசியில் நீச நிலையில் சுக்கிரனும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். இதனால் வேலை மற்றும் நீங்கள் எதிர்பார்த்த நிதி முன்னேற்றம் அடைய சிரமங்களை தாண்ட வேண்டியிருக்கும்.
வேலை தொடர்பாக சரியான தகவல் தொடர்பு, திட்டமிடல் மற்றும் முடிக்கப்படாமல் இருக்கக்கூடிய வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்தவும்.
குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப விஷயத்தில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளை உடனடியாக பேசி தீர்ப்பது நன்மை தரும். உணர்ச்சி வசப்படுவதை விடுத்து, பிறர் கூறுவதையும் காது கொடுத்து கேட்கவும். இதுவே பல பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்வதிலும், உடல்நிலை மேம்படுத்தும் விதமாக உடற்பயிற்சி செய்யவும் தவறாதீர்கள்.
கும்பம் நவம்பர் மாத ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு நவம்பர் மாதம் கிரக நிலைகளால் சில நன்மைகள் அடைந்தாலும், கிரகங்களின் அமைப்பு உங்களுக்கு சிரமங்களையும், தொந்தரவுகளையும் தரக்கூடியதாக இருக்கலாம். குடும்பத்திலும், வேலை தொடர்பாக சில அசோகரித்தை சந்திப்பீர்கள்.
நீங்கள் செய்து வரக்கூடிய தொழில், வியாபாரத்தில் உங்களுடைய யோசனைகளை மீண்டும் பரிசீலிக்க நேரிடும். முதல் இரவு மற்றும் முடிவு எடுப்பதில் நிதானத்தை கடைபிடிக்கவும். உங்களுடைய உறவுகளையும், நட்பையும் பராமரிக்க முக்கியத்துவம் கொடுக்கவும்.
சமூக பணிகளை செய்யக்கூடியவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். கூட்டு முயற்சி எடுப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.
நீங்கள் திட்டமிட்ட வேலையை முடிக்கவும், இலக்கை அடையவும் கடின உழைப்பு தேவைப்படும். துணிச்சலுடன் நீங்கள் செய்யும் வித்தியாசமான உங்களுடைய முயற்சிகள் நல்ல பலனை தர வாய்ப்பு உண்டு. இந்த மாதத்தில் சோம்பேறித்தனத்தை விடுத்து, முன்னேற்றத்தைக் காண சுறுசுறுப்புடன் செயல்படவும்.
