சபாநாயகர் மகனுக்கு PRO பதவி? 30 எம்எல்ஏக்கள் நடுவே ஜேசிடி பிரபாகர் மகன் அமலன் – முதல் டூட்டி என்ன தெரியுமா – jcd prabhakar s son amalan at mla training camp pro appointment sparks controversy

மாமல்லபுரத்தில் நடைபெறும் எம்எல்ஏக்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி முகாமில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் மகன் அமலன் பங்கேற்றதாகக் கூறப்படும் பதிவுகள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் ஆளும் அரசுக்கு எதிரான சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, குழந்தைகள் காணாமல் போவது, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை எனத் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராகக் கடும் எதிர்வினைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், 2026 தேர்தலுக்குப் பிறகு முழுக்க முழுக்கத் தமிழக அரசுக்குச் சாதகமாக இருந்ததாகக் கூறப்படும் இளைஞர்களின் எழுச்சி, தற்போது அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டத் தொடங்கியிருக்கிறது.

எம்எல்ஏக்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி!

இந்தச் சூழலில்தான், சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தவும், ஆட்சி நிர்வாகம், சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகள், தொகுதி மேம்பாடு உள்ளிட்டவை குறித்துத் தெளிவாக அறிந்துகொள்ளவும் தமிழக சட்டப்பேரவைத் தலைவர்ஜே.சி.டி. பிரபாகர்தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவப் பயிற்சித் திட்டம் இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக 30 எம்எல்ஏக்கள் பங்கேற்கும் இந்தப் பயிற்சியில், எம்எல்ஏ அல்லாத சபாநாயகரின் மகன் பங்கேற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

31-வது நபராக சபாநாயகரின் மகன்?

இது தொடர்பாக வெளியாகி வரும் சமூக வலைதளப் பதிவுகளில், 30 எம்எல்ஏக்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் எனக் கூறிவிட்டு, 31-வது நபராகத் தனது சொந்த மகனைச் சபாநாயகர் அழைத்து வந்திருப்பது தமிழக சட்டப்பேரவை நடத்தும் பயிற்சி முகாமுக்குக் களங்கம் விளைவிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எம்எல்ஏ லீடர்ஷிப் ப்ரோக்ராம் (MLA Leadership Programme) என அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தப் பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சிக்குப் பிறகு எடுக்கப்பட்ட குழுப் புகைப்படத்தில், எம்எல்ஏ அல்லாத சபாநாயகரின் மகன் அமலன் நிற்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக மாறியுள்ளது.

சபாநாயகரின் மகனுக்கு மக்கள் தொடர்பு அதிகாரி பதவியா?

இந்தச் சூழலில், சபாநாயகரின் மகன் அமலனுக்கு மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) பதவி வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PRO பதவி என்றால் என்ன?

PRO எனப்படும்Public Relations Officer (மக்கள் தொடர்பு அதிகாரி) பதவிஎன்பது, ஒரு நிறுவனம் அல்லது அமைப்புக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தகவல் தொடர்புகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பைக் கொண்டதாகும். அரசுத் துறைகளில் இப்பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆனால், இந்தப் பதவிக்கு எந்தவிதமான விளம்பரமும், விண்ணப்ப நடைமுறையும், தேர்வும் இல்லாமல் தனது சொந்த மகனுக்கு நேரடியாக எவ்வாறு வழங்க முடியும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

திமுக எம்.எல்.ஏ அடித்த கமெண்ட்…ரசித்த சபாநாயகர்

அதுமட்டுமின்றி, எம்எல்ஏக்களுக்கான பயிற்சி முகாமில் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு என்ன வேலை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தந்தை சபாநாயகர் என்ற ஒரே தகுதியை அடிப்படையாகக் கொண்டு மகனைச் சட்டப்பேரவைக்குள் அனுமதிப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது தகவல்கள் இல்லாத நிலையில், அவற்றின் சட்டபூர்வத் தன்மை குறித்து முடிவுக்கு வர முடியாது.

ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கிய நியமனங்கள்:

ஏற்கெனவே, முதல்வரின் ஜோதிடர் ரிக்கிரதன் மற்றும் விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோருக்கு அரசு பதவிகள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டு, பின்னர் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அந்த முடிவுகள் பின்வாங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழலில், தற்போது சபாநாயகரின் மகனும் இதுபோன்ற முறைகேடான நியமனம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அரசுப் பதவிகள் மற்றும் சட்டப்பேரவை சார்ந்த நிகழ்வுகளில் வெளிப்படைத்தன்மை, தகுதி மற்றும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்விகள் இந்த விவகாரத்தின் மூலம் மீண்டும் எழுந்துள்ளன.

Source link