நடைபயிற்சி சென்ற வழக்கறிஞர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை; பைக் ஸ்டார்ட் ஆகாமல் திணறிய குற்றவாளி: வைரலான வீடியோ

மிர்சாபூர்

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் நகரில் நேற்று காலை ராஜீவ் சிங் என்ற வழக்கறிஞர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் பைக் ஒன்றில் வந்தனர். அவர்களில் ஒருவர், சிங்கை நெருங்கி சென்று, கைத்துப்பாக்கியால் சுட்டு விட்டு திரும்பி பைக்கை நோக்கி ஓடினார்.

எனினும், அந்த பைக் நீண்ட நேரம் ஸ்டார்ட் செய்தும் அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால், பைக்கின் முன்னால் இருந்த நபரை இறங்கும்படி கூறி விட்டு, துப்பாக்கியால் சுட்ட நபர் பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது, சம்பவ பகுதியில் இருந்த சுற்றியிருந்தவர்களில் சிலர் குற்றவாளிகளை பிடிப்பதற்காக அவர்களை நோக்கி ஓடி வந்தனர்.

ஆனால், அவர்களை மற்றொரு நபர் துப்பாக்கியை காட்டி, மிரட்டி நெருங்க விடாமல் தடுத்து விட்டார். இதன் பின்னர், பைக் ஸ்டார்ட் ஆனதும் 2 பேரும் தப்பி சென்றனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. அந்த நபர் இருவரும் யாரென உடனடியாக தெரிய வரவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. எதற்காக இந்த படுகொலை சம்பவம் நடந்தது என்பது பற்றியும், தப்பியோடிய நபர்களை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link