ஜீவா நடிக்கும் 49-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கோ, கலகலப்பு 2 ரவுத்திரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அவர் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை முகமது முஸ்தஃபா இயக்க நடிகைகள் நிமிஷா சஜயன், ‘வாழை 2’ ஏஞ்சல் மரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இது, ஜீவாவின் 49-வது திரைப்படமாக உருவாகிறது.
இயக்குனர் முகமது முஸ்தபா
நடிகராக அறிமுகமாகி இயக்குனராக மாறிய முகமது முஸ்தபா, தனது முதல் படமான ‘கப்பேலா’ மூலம் கேரள மாநில அரசின் ‘சிறந்த அறிமுக இயக்குனர்’ விருதைப் பெற்றவர். சமீபத்தில் சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் ஹிருது ஹாரூன் நடிப்பில் வெளிவந்த கேங்ஸ்டர் திரைப்படமான ‘முரா’ படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
