அன்பில் மகேஷ் கைது விவகாரம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த Reply -சிக்கலில் திமுக – union finance minister nirmala sitharaman on anbil mahesh arrest,

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கல ந்டு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழகத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ள முக்கிய அரசியல் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

அன்பில் மகேஸ் கைது விவகாரம்

ரூ.100 கோடி ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், இதில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக திமுக தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், “இந்த வழக்கை யார் பதிவு செய்தது? மாநில அரசுதானே பதிவு செய்துள்ளது?” என்று திருப்பிக் கேட்டார். அதற்கு செய்தியாளர்கள் மாநில காவல்துறைதான் நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கூறியதும் மாநில அரசின் நடவடிக்கையில் மத்திய அரசின் சார்பில் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது; எனவே இதில் நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை” என்று கூறி முடித்துக்கொண்டார்.

தமிழக கடன் விவகாரம் – சட்டமன்றமே சரியான களம்

தொடர்ந்து, தமிழக அரசின் கடன் வாங்கும் அளவு குறைந்துள்ளதாகக் கூறப்படுவது மற்றும் அது தொடர்பாக திமுகவின் முன்னாள் நிதி அமைச்சர் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவதுநியாயமாகப் பார்த்தால், தமிழகத்தின் கடன் நிலவரம் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான அம்சங்கள் அனைத்தும் தமிழக சட்டமன்றத்தில் (Legislative Assembly) மிக விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான விவகாரங்களாகும்.

ஜனநாயகத்தின் மூலமே இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்

மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பில் இருக்கும் நான், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் நிதிச் சூழல் குறித்து பொதுவெளியில் விமர்சித்துப் பேசுவது பொருத்தமாக இருக்காது. அரசியல் கட்சிகள் வெளியே பேசிக்கொள்வது அவர்களின் விருப்பம். ஆனால், தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை சட்டமன்றத்தின் உள்ளே எடுத்துச் சென்று காரசாரமாக விவாதிக்க வேண்டும். சட்டமன்றத்தில் விவாதிக்கும்போதுதான் அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிவரும்; அதன் மூலமாக மட்டுமே பொதுமக்களுக்கு உண்மை நிலைமை என்ன என்பது தெளிவாகத் தெரியவரும்” என்று அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் கைது நடவடிக்கை மற்றும் நிதி மேலாண்மை தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசை தொடர்புபடுத்துவதை நிராகரித்த மத்திய அமைச்சர், சட்டமன்ற ஜனநாயகத்தின் மூலமே இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைத் தனது பேட்டியின் மூலம் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளார்.

Source link