மேற்குவங்காளம்: முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்க 3.60 கோடி பேர் தகுதி

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், எஞ்சிய 142 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் 152 தொகுதிகளுக்குமான முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்க 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட தேர்தலில் 16 மாவட்டங்களில் உள்ள 142 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்களில் 1 கோடியே 84 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள் என்றும், 1 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் பெண்கள் என்றும், 465 வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Source link