தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்; அரசாணை வெளியீடு

சென்னை,

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை பெருநகர பகுதி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இயங்கும் கான்ட்ராக்ட் கேரேஜ் ஆட்டோ ரிக்சாகளுக்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசாணையின்படி இந்த புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 67-ன் கீழ் இதற்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு 2013 மற்றும் 2014-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பழைய அரசாணைகள் ரத்து செய்யப்பட்டு இந்த புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.

ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்

அதன்படி, ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தூரம் 1.8 கிலோ மீட்டராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ. 25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மலைப்பாதைகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் கூடுதலாக பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா ரூ. 30 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரவு நேர கட்டணம் (இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை) சாதாரண கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காத்திருப்பு கட்டணம் 1 நிமிடத்திற்கு தலா ரூ. 1 என நிர்ணயம் செய்யப்பட்ட்டுள்ளது.

Source link