இன்று பராபவ வருடம் அக்டோபர் 28ம் தேதி, ஐப்பசி 11 புதன் கிழமை. இன்று திரிதியை திதி, மேஷ ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய நாள். இன்று அமிர்த யோகம். கன்னி ராசியை சேர்ந்த சித்திரை பின்பு சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம். இன்று கடக ராசியில் குரு – செவ்வாய் இணைவும், துலாம் ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரனும் இருக்கும் நாளில் உருவாகும் கெளரி யோக அருள் 12 ராசிகளுக்கு நற்பலன்கள் அருள்வார்.
இன்று 28 அக்டோபர் 2026, ஐப்பசி 11 புதன் கிழமை, திரிதியை திதி, இன்று சந்திர பகவான் மேஷ ராசியின் கிருத்திகை பின்பு ரோகிணி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம். கன்னி ராசியில் உள்ள சித்திரை பின்பு சுவாதி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நிதி ஆதாயம் கிடைக்கும் கூடிய நாள். இன்று சுப நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளிலும், வேலையை வேகமாக முடிக்கவும் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். குடும்பத்தொழில் செய்யக் கூடியவர்களுக்கு, குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள். நெருங்கிய உறவினர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவக்கூடிய நாள்.பேச்சில் இனிமே இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மங்களகரமான, இனிமையான நாளாக அமையும். மன உறுதி உயரக்கூடிய நாள். சக ஊழியர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் மீது நாட்டம் ஏற்படும். இன்று உங்களுடைய குடும்ப சூழ்நிலை சாதகமாகவும், நல்லிணக்கத்துடனும் இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்புக்கும், ஆதரவுக்காக ஏங்குவீர்கள். மாலை நேரத்தில் மகிழ்ச்சியாக நேரம் செலவிட நல்ல நல்ல சூழல் அமையும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து நிதானமான போக்கு தேவை. முடிவுகளில் அவசரப்பட வேண்டாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதியின் அமைப்பு சற்று சாதகமற்ற பலனை தரக்கூடியதாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் வேலைப்பளு சந்திக்க நேரிடும். புதிய சிந்தனை, உற்சாகத்துடன் செயல்படவும். சரியான நேரத்தில் வேலையை முடிக்க அனைத்து தகவல்களையும் சேகரிக்கவும். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாழ்க்கை துணையிடமிருந்து ஆதரவு கிடைக்கும். அண்டை வீட்டாருடன் நல்லுறவை பேணவேண்டிய நாள். முன்னர் நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் லாபம் இன்று பெறுவீர்கள்.இன்று உங்களுக்கு சுப விரயங்கள் ஏற்படும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நன்மைகள் பெறக்கூடிய நாள். குருவின் அருளால் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வேலைகள் முன்னேற்றமும், லாபம் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும். எதிர்பாராத சில நிதி நன்மைகள் பெறுவீர்கள். கல்வி, வேலை தொடர்பான செயல்பாடு முன்னேற்றம் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பெரியவர்களின் ஆதரவு நிம்மதியை தரும். காதல் துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். மகிழ்ச்சியான பயணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். சமூகத்தில் உங்களுடைய மரியாதை உயரும். தொட்ட காரியங்கள் வெற்றி அடையும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பணி சூழல் சாதகமாக இருக்கும். சில நாட்களாக தொந்தரவு தந்த உடல் நலப் பிரச்சினைகள் தீரும். உங்களுடைய சாமர்த்தியமான செயல்பாடுகளால் குடும்ப பொறுப்புகளையும், வேலையையும் வேகமாக முடிக்க முடியும். குடும்பத்தொழில் முன்னேற்றமடைவதோடு, குடும்ப சொத்து தொடர்பாக நன்மைகள் பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். இன்று சுவையான உணவு உண்டு மகிழ்வீர்கள். ஆன்மீகத்தின் மீது நாட்டம் அதிகரிக்கும். தந்தை வழியில் ஆதரவு பெறுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நிதி ஆதாயம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கக்கூடிய நாள். புதிய ஒப்பந்தங்கள் பெற வாய்ப்புகள் உண்டு. அதே சமயம் உங்கள் செயல்பாடுகளிலும், பேச்சிலும் நிதானத்தை கடைபிடிக்கவும். பணப்பரிவர்த்தனை, ஒப்பந்தங்கள் விஷயத்தில் தகவல்களை முழுமையாக ஆராய்ந்து செயல்படவும். உங்கள் பிள்ளைகள் மூலம் வெற்றி காண்பீர்கள். வேலை பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அதனால் உடல் சோர்வு ஏற்படலாம். சில நாட்களாக இருந்த கடினமான சூழல் மாறும். தடைகள் விலகி வெற்றி கிடைக்கக்கூடிய நாள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் சரியான திட்டங்களுடன் செயல்படவும். பணியிடத்தில் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதோடு, எந்த சூழலிலும் கோபத்தை கட்டுப்படுத்தி செய்து முடிக்கவும். இன்று தனவரவு இருந்தாலும், செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். வீட்டின் பராமரிப்பு தொடர்பான செலவுகள் ஏற்படலாம். உங்களுடைய குடும்ப பிரச்சினைகளால் மன அழுத்தம் சந்திக்க நேரிடும். குடும்ப உறவுகளை பராமரிப்பதிலும், வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கவும் சக ஊழியர்களுடன் இனிமையான பேச்சு உதவும். இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதும், குருவின் நற்பார்வையுடன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கூட்டணி செயல்பாடு பயனளிக்க கூடியதாக இருக்கும். இன்று உங்களுடைய நிர்வாக திறன் மற்றும் அனுபவம் எதிர்பார்த்த பலனை தரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மாமியார் வீட்டாரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வேலை, சுப காரியங்கள் தொடர்பாக நல்ல செய்தி தேடி வரும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல் நலனை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடவும். பணியிடத்தில் அழுத்தங்களால் மன உளைச்சல் ஏற்படலாம். வேலையை விரைவாக முடிப்பதற்காக சிரமப்படுவீர்கள். இன்று வண்டி, வாகன பயன்பாடுகளில் கவனம் தேவை. தேவை. அது தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் உறவினர்களின் ஆதரவும், அவர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலன்கள் தேவை. அண்டை வீட்டாருடன் விட்டுக்கொடுத்து செல்லவும்.குழந்தை வழியில் சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நிதிநிலை முன்னேற்றம் அடையவும், லாபத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும் நாள். கல்வி, வேலை தொடர்பாக சிறப்பாக செயல்படுவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றிகரமாக அமையும். உங்கள் செயல்பாடுகளுக்கான பரிசு, பாராட்டு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். குடும்ப விஷயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். உங்கள் பேச்சு மற்றும் செயல்பாடுகளுக்கு மதிப்பு உயரக்கூடிய நாள். காதல் வாழ்க்கையில் துணையுடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும்.உங்கள் பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தனை மேம்படக்கூடிய நாள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய நாள். புதிதாக ஏதேனும் ஒரு பொருளை வாங்குவது அல்லது செயலை செய்யத் தொடங்கும் முன் அதன் எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு செயல்படவும். புதிய நபர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியையும், சில நல்ல ஆலோசனைகளையும் தரக்கூடியதாக இருக்கும். வேலையில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வேலை தொடர்பான பழைய பிரச்சினை தலை தூக்க வாய்ப்புகள் உண்டு. வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். தாயின் நலனில் கவனம் தேவை.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதிநிலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். குறிப்பாக அதிகரிக்க கூடிய செலவுகள் கட்டுப்படுத்த வேண்டிய நாள். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் தேவை. இன்று உங்களுடைய கல்வி தொடர்பாக மற்றும் உடல் நலனில் தொந்தரவுகளை சந்திப்பீர்கள். உங்கள் பொழுதுபோக்குக்காக பணம் அதிகம் செலவிட வாய்ப்பு உண்டு. குடும்ப வாழ்க்கையில் கோபத்தை விடுத்து அன்பான பேச்சால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இன்று ஒரு சில நல்ல செய்திகள் தேடி வரும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதையும் சாதிக்கும் தைரியம் கூடும்.
பலனை கணித்தவர்
டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்,சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர்.மொபைல் எண்: 9087426655
