7 வருஷமா விஜய் ஜெயிப்பார்னு சொல்லிருக்கேன்: என் கணிப்பை ஏன் விவாதிக்க மறுக்கிறீர்கள்? – ஜோதிடர் ரிக்கி ரத்தன் ஆவேசம் – astrologer rikki rathan questions why his prediction of vijay winning has not been debated after 7 years

தமிழக முதல்வரும் தவெக தலைவருமான முதல்வர் விஜய் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவரின் ஆஸ்தான ஜோதிரான ரிக்கி ரத்தன் தனது யூடியூப் வலையொளியில் தொடர்ந்து ஜோதிடம் குறித்தும் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்தும் அவர் பேசி வருகிறார்.

சமீபத்தில் வெளியான அவரது வீடியோவில், 2026 அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியைத் தொடர்ந்து, கும்பம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த 86 நாட்கள் சிறப்பான காலமாக அமைய வாய்ப்புள்ளதாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் தெரிவித்துள்ளார்.

விஜய், தவெக வெற்றி குறித்து கணித்தது என்ன?

நடிகர் விஜய் மற்றும்தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் ரிக்கி ரத்தன் பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து ஆறு முதல் ஏழு ஆண்டுகளாகத் தாம் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2026ஆம் ஆண்டு விஜய் முதலமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாகத் தனது கணிப்பை முன்வைத்துள்ளார்.

மேலும், ஜோதிடத்தைப் பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் அதன் மூலம் அரசியல் குறித்த கருத்துகளை உருவாக்கிக்கொள்ளும் வாக்காளர்கள் பற்றியும் அவர் பேசியுள்ளார். ஜோதிட நம்பிக்கைகள் தேர்தல் காலத்தில் வாக்காளர்களின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாகத் தனது வீடியோக்களில் திமுக அரசு குறித்து விமர்சனக் கருத்துகளைப் பதிவு செய்து வரும் ஜோதிடர் ரிக்கி ரத்தன், திமுக நாத்திகம் பேசிவிட்டு தமிழ்நாட்டில் தோல்வியைச் சந்தித்துள்ளதாக விமர்சித்தார். மேலும், தைப்பூசத் திருநாளுக்கு முறையாக அரசு

பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பவில்லை?

மேலும் பேசிய அவர், பத்திரிகைகளில் ஜோதிடம் குறித்து மிக மோசமாக எழுதுவதாகக் குற்றம்சாட்டினார். ஆனால், “ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைவார், விஜய் தமிழகத்தின் முதல்வராக மாறுவார்” என்று தான் கணித்தது குறித்து எந்தப் பத்திரிகையாளரும் தன்னிடம் வந்து ஏன் கேள்வி எழுப்பவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும்விஜய் தோல்வியடைவார்என்றே தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், தான் முன்வைத்த கணிப்புகள் குறித்து இதுவரை எந்தப் பத்திரிகையாளரும் தன்னிடம் கேள்வி எழுப்பவில்லை என்றும் பேசினார்.

இதுதான் பகுத்தறிவா? ரிக்கி ரத்தன் கேள்வி

மேலும், தான் தொடர்ந்து தனது கணிப்புகளை முன்வைத்தாலும், அவற்றை ஏன் விவாதத்திற்கான ஒரு கருத்தாகக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். “இதுதான் பகுத்தறிவா? பகுத்தறிவு என்பது எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து பார்ப்பதுதானே?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

விஜயகாந்த் Vs விஜய் ஒப்பீடு சரியா? 2026 தேர்தல் எப்படி இருக்கும்? Decoded

தியானம், தன்னம்பிக்கை குறித்த அறிவுரை

ஜோதிடப் பலன்களுடன், வாழ்க்கையில் வெற்றி பெற அமைதி, பொறுமை, தெளிவான சிந்தனை மற்றும் நன்றியுணர்வு ஆகியவை அவசியம் என்றும் ரிக்கி ரத்தன் வலியுறுத்தியுள்ளார். தியானம் மற்றும் மனத்தெளிவு மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Source link