நாகை: பெண்ணிடம் ரூ.7,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

நாகை,

நாகை மாவட்டம், சிக்கல் பகுதியில் பெண்ணிடம் ரூ.7,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

பெண்ணிடம் ரூ.7,500 லஞ்சம்

நாகை மாவட்டம், சிக்கல் அருகே உள்ள ஆவராணியைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன் இறந்ததை அடுத்து, அவரது மனைவி ரேணுகா (வயது34) அரசின் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்கு கிராம நிர்வாக அதிகாரி செல்வம்(52) ரூ.7,500 லஞ்சம் கேட்டுள்ளார்.

கிராம நிர்வாக அதிகாரி கைது

இதில் விருப்பமில்லாத ரேணுகா நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தல்படி ரசாயனம் தடவிய பணத்தை ரேணுகா நேற்று செல்வத்திடம் கொடுத்தபோது, பதுங்கியிருந்த போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Source link