காணொளிக் குறிப்பு,
காணொளி: எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் புகுந்த கடல் நீர்
பிரசுரிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்
சென்னை எண்ணூரில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) இரவு அர்னாப் புயலின் தாக்கத்தால் கடல் சீற்றம் அதிகரித்ததால், ராட்சத அலைகள் கடற்கரைத் தடுப்புக் கற்களைத் தாண்டி எண்ணூர் விரைவுச் சாலையில் புகுந்தன. கடல் நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
எண்ணூர் பாரதியார் நகர் முதல் தாழங்குப்பம் வரையிலான கடலோரப் பகுதிகளில் அலைகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. தாழங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் புகுந்ததாகவும், திருவொற்றியூர் காசி கோவில் குப்பம் பகுதியில் சில வீடுகளுக்குள் கடல் நீர் சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எண்ணூர் விரைவுச் சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதித்த காவல்துறையினர், வாகனங்களை மாற்றுப் பாதைகளில் திருப்பிவிட்டனர்.
கடல் சீற்றம் நீடித்ததால், பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்வதையும், அலைகளைப் படம் பிடிப்பதற்காக ஆபத்தான இடங்களில் நிற்பதையும் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
