ஆந்திரா : கரையை கடக்கும் ‘அர்னாப்’ புயல்.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை – arnab cyclone andhra pradesh cm chandrababu naidu precautionary measures

வங்காள விரிகுடாவில் உருவாகி, தற்போது ஏனாம் மற்றும் காக்கிநாடா கடற்கரைப் பகுதிகளைத் தாக்கி வரும் அர்னாப் என்ற கடுமையான புயலை முன்னிட்டு, மாநில அரசு மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளது.

காக்கிநாடா கடற்கரைப் பகுதியை நோக்கி நகரும் அர்னாப் புயல்

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது அருணா புயலாக வலுப்பெற்று உள்ளது. தற்பொழுது ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடா கடற்கரைப் பகுதியை நோக்கி புயல் நகரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையில் வானிலை ஆய்வு துறை, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ,காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆந்திராவில் அதிக கனமழை பெய்த இடங்கள்

அனகாப்பள்ளி

கண்ணிப்பாளையம்- 26.15 செ.மீ

விஜயநகரம்

கே.வி.பி.ஆர்.பள்ளி-25.97 6.5.செ.மீ

விசாகப்பட்டினம்

16வது காவல் பட்டாலியன் பகுதி-25.91 செ.மீ

பரவாடா-24.58 ..செ.மீ

தாடி கிராமம்-24.15 6.5.செ.மீ

சிம்மாச்சலம்-23.63 ..செ.மீ

வேபடா-22.71 செ.மீ

மணிக்கு 120-135 கி.மீ காற்று வீசக்கூடும்

அர்னாப் புயல் தற்பொழுது கடைக்கு கடக்கும்போது வீசும் பலத்த காற்றின் வேகம் மணிக்கு 120-135 கி.மீ வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. கோதாவரி, காக்கிநாடா, கோனசீமா, கிருஷ்ணா, என்.டி.ஆர் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும் மாநிலம் முழுவதும் மேற்க்கொள்ளப்பட்டு வரும் கள நிலவரம் குறித்த விவரங்களை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேட்டறிந்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை

பின்னர், தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகளில் இருந்து மக்களை, ஏற்கனவே தயார் செய்யப்பட்ட மறுவாழ்வு மையங்களுக்கு மாற்றும் பணியை நிறைவு செய்யவும், அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மரங்கள் விழுவது மற்றும் மின் கம்பங்கள் விழுவது போன்ற சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில், சாலைகளைச் சீரமைக்க தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தீயணைப்புக் குழுக்கள் உடனடியாக ஈடுபடுத்தப்பட வேண்டும்.

யாரும் கவலைப்படத் தேவையில்லை – முதலமைச்சர் உறுதி

மின் விநியோகத்தில் ஏற்படும் தடைகளைத் தவிர்ப்பதற்காக, மனிதவளத்தையும் மின்கம்பங்களையும் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்குமாறு எரிசக்தித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. புயலின் தாக்கம் தணியும் வரை, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் மீனவர்களும் கடலோரப் பகுதிகளுக்கு வரவோ அங்கிருந்து திரும்பவோ வேண்டாம் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

அவசரகால உதவிக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளையும் உதவி எண்களையும் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். அரசு இயந்திரம் தொடர்ந்து சேவையில் இருக்கும் என்றும் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றவும், வானிலை சீரடைந்ததும் மின் விநியோகத்தை மீட்டெடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link