பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்கும் ஷாருக்கான்: காரணம் என்ன?

மும்பை,

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது 61-வது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானின் 61வது பிறந்தநாள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வரும் நவம்பர் 2-ம் தேதி தனது 61-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளின்போது மும்பையில் உள்ள அவரது இல்லமான மன்னத் முன்பு ரசிகர்கள் திரண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, மன்னத் இல்லத்தின் முன்பு ரசிகர்களை சந்திப்பதற்குப் பதிலாக, மும்பையில் உள்ள பால்கந்தர்வ ரங் மந்திர் அரங்கில் ரசிகர்களுக்கான பிரத்யேக சந்திப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தி வந்தார்.

ஆனால், இந்த ஆண்டு தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை ஷாருக்கான் நடத்தமாட்டார் எனத் தெரிகிறது. அவர் தற்போது நடித்து வரும் ‘கிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கிங் படப்பிடிப்பில் ஷாருக்கான்

பிறந்தநாளன்று லண்டனில் ‘கிங்’ படத்துக்கான பாடல் காட்சியின் படப்பிடிப்பில் ஷாருக்கான் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மும்பையில் நடைபெறும் வழக்கமான ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, ‘கிங்’ திரைப்படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஷாருக்கான் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்

Source link