Aries Rahu Ketu Transit Effects 2026,மேஷம் ராகு கேது பெயர்ச்சி 2026: சாதகமான பலன்கள் மற்றும் கவனம் தேவைப்படும் விஷயங்கள் – rahu ketu transit 2026 for aries: potential benefits and areas requiring caution

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 13ஆம் தேதி நவம்பர் 2026 இரவு 8:30 மணிக்கு ராகு கேது பெயர்ச்சியில் நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது மேஷ ராசிக்கு ராகு 10 இடமான தொழில் ஸ்தானத்திலும், கேது 4ம் வீடான சுகஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாக உள்ளனர்.

பொதுவான பலன்கள்
பத்தாம் வீட்டில் ராகு வரக்கூடிய நிலையில் உங்களுடைய தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பாக அதிக கவனம் தேவைப்படும். அதேபோல கேது நான்காம் இடத்திற்கு வருவதால் உங்களுடைய வீடு, குடும்பம், மன அமைதி போன்ற விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படலாம். இந்தப் பெயர்ச்சியில் நடந்த பின் பின்னர், ஒன்றரை ஆண்டுகள் உங்களுடைய தொழில் முன்னேற்றத்தை தேடக்கூடிய காலமாகவும் – குடும்ப அமைதியை பாதுகாக்க வேண்டிய காலமாக இருக்கும்.

தொழில் எப்படி இருக்கும்?

உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் ராகுவின் சஞ்சாரம் உங்களுடைய தொழில் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.
குறிப்பாக நீங்கள் செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். அதனால் ஒரே நேரத்தில் பல்வேறு முயற்சிகளை செய்ய நினைப்பீர்கள். நவீன தொழில்நுட்பங்கள் உங்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

உங்களுடைய தொழிலாளர்கள் மூலம் பயனடைவீர்கள். அதே சமயம் தொழில் முயற்சிகள் முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் அவசரப்படுவதை தவிர்க்கவும். நிதானமான போக்கு உங்களுக்கு உதவக்கூடியதாக இருக்கும்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உங்களுடைய தொழிலை விரிவுபடுத்தும் விதத்தில் புதிய சந்தையை தேடும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆன்லைன் தொழில்நுட்பம் உங்களுடைய வியாபாரத்தை விரிவுபடுத்த உதவும். லாபம் நஷ்டத்தை ஆராய்ந்து செயல்பட வேண்டிய காலம்.

உத்தியோகம் எப்படி இருக்கும்?

வேலையில் இருப்பவர்களுக்கு, சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். அதே போல உங்களுடைய வேலையில் மாறுபட்ட பொறுப்புகள், புதிய இடங்களுக்கான இடம் மாற்றம், புதிய நிர்வாகத்தின் கீழ் பணி புரிதல் போன்ற விஷயங்கள் நடக்கலாம்.
நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் திடீரென நடக்க வாய்ப்புகள் உண்டு.

உங்களுடைய நவீன தொழில்நுட்பத் திறன், புதிய திறன்களை வளர்த்துக் கொள்வது என காலத்திற்கேற்ற விதத்தில் உங்களை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தவும்.
வேலையை மாற்ற நினைப்பவர்கள் உடனடியாக முடிவு எடுக்காமல், பணி சூழல் உணர்ந்து சிந்தனையுடன் செயல்படவும்.

பொருளாதார நிலை

பண வரவு அதிகரிக்க கூடிய காலமாக இருக்கும். உங்களுடைய வேலை, தொழில் மூலம் வருமானத்திற்கான மாற்று வழிகள் சிந்திக்க தொடங்குவீர்கள்.
உங்களுடைய சுகஸ்தானத்தில் கேது இருப்பதால் வீடு, வாகனம், குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர வசதிகள் பெருக்குவது போன்றவற்றிற்கு செலவுகள் அதிகரிக்கலாம்.
அதே சமயம் புதிய முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். இன்று இது போன்ற விஷயங்களில் வல்லுனர்களின் ஆலோசனை பெற்று, உங்களுடைய சிந்தனையுடன் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். அதிக லாபம் தரக்கூடியது என எண்ணி எதிலும் அவசரப்பட்டு நீங்கள் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
இந்த காலத்திலும் உங்களுடைய வீட்டை மாற்றுவது, வீட்டை புதுப்பிப்பது போன்ற விஷயங்களுக்காக செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைகளை சமரசம் செய்து கொள்வது நன்மை தரும். வாகனம், சொத்து வாங்குவது தொடர்பான நெருக்கடியை நீங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.

குடும்பம் நிலை

தாயார் ஸ்தானத்தை குறிப்பிடக்கூடிய நான்காம் இடத்தில் கேது அமர்வதால் உங்களுடைய தாயின் உடல் நலனில், மனம் நலனில் அக்கறை காட்டவும். கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். வேலை பளு காரணமாக உங்களுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது குறையும்.
திருமண வாழ்க்கையில் சில மன அழுத்தம் சந்திக்க நேரிடும்.

வேலை தொடர்பான உங்களுடைய துணையின் அழுத்தங்களை புரிந்து கொள்ள பார்க்கவும்.
திருமணமாகாதவர்களுக்கு அது தொடர்பாக இருக்கக்கூடிய முயற்சிகளால் நல்ல வரனை தேட முடியும். அதே சமயம் இது தொடர்பான முடிவு எடுக்கும் முன் இருமுறை நன்றாக விசாரிப்பது அவசியம்.

கல்வி மற்றும் மாணவர்கள்

குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். படிப்பு தொடர்பாக கவன சிதறல் ஏற்படக்கூடிய சூழல் ஏற்படும்.
போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய இளைஞர்கள் உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்க தாமதமாகலாம். இருப்பினும் உங்கள் முயற்சியை கைவிட வேண்டாம்.
​உயர்கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகள் பெறலாம். சிலருக்கு கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

மனம் மற்றும் உடல் நலன்

கேது உங்களுடைய நான்காம் இடத்தில் இருப்பதால் சிலருக்கு மன குழப்பம், திருச்சியில் இல்லாத நிலை ஏற்படலாம். இந்த காலத்தில் உங்களுடைய ஆன்மீக சிந்தனை மேம்படுத்தி, இறை நம்பிக்கை உங்களுடைய மன அமைதிக்கு உதவக் கூடியதாக இருக்கும்.

உடல் நலம் தொடர்பாக பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது என்றாலும், சிலருக்கு வேலைப்பளு, மன அழுத்தம் போன்றவற்றால் சோர்வுகள் ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்குவதும், சுறுசுறுப்பாக உடற்பயிற்சி வேலைகளை செய்வதும் நன்மை தரும். ஏற்கனவே உடல் நலப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற தவறாதீர்கள்.

எளிய பரிகாரம்

இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் உங்களுடைய மன அமைதியை பேணுவதில் அக்கறை செலுத்தவும். விநாயகர், துர்க்கை அம்மன் வழிபாடு, நாக தேவதை வழிபாடு போன்ற பாரம்பரிய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய காலம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்கு செல்வதும் விளக்கேற்றி வழிபாடு செய்யவும். ஏழை எளியவர்களுக்கு உதவும். அன்னதானம் வழங்குவது மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.

குறிப்பு:

மேற்கண்டவை சந்திர ராசியை அடிப்படையாகக் கொண்ட பொதுவான ராகு–கேது பெயர்ச்சி பலன்கள். தனிப்பட்ட ஜாதகத்தில் லக்னம், தசா–புக்தி, கிரக நிலைகள் மற்றும் பிற அம்சங்களுக்கு ஏற்ப பலன்களில் மாற்றங்கள் இருக்கலாம்.​

Source link