ஐபிஎல் 2026 சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா மீது அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருந்தது. புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தை மட்டுமே பிடித்த நிலையில், அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கெய்ரன் பொல்லார்ட், ‘‘ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி, எங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை’’ எனக் கூறினார்.
இதனால், கடும் அதிருப்தியடைந்த ஹர்திக் பாண்டியா, டிரேடிங்கில் வெளியேற முடிவு செய்தார். ஹர்திக் பாண்டியா அணியில் இருந்தால், 12 வீரர்களுடன் ஆடுவதற்கு சமம் என்பதால், இவரை வாங்க அணிகள் கடும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி நடக்கவில்லை. ஹர்திக் பாண்டியா பார்ம், அவரது வயது காரணமாக, அவரை வாங்க அணிகள் யோசித்தன.
இதற்கு காரணம், மும்பை இந்தியன்ஸ் அணிதான். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, பார்மில் இருக்கும் இளம் வீரரை கேட்டனர். இதனால், அதிருப்தியடைந்த அணிகள், ஹர்திக் பாண்டியாவை வாங்க ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கேவுக்கு வர விரும்பிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே கேட்டது. இதனால், பேச்சு வார்த்தையை சிஎஸ்கே நிறுத்திக் கொண்ட நிலையில், தற்போது, தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் தலைமையில் பேச்சு வார்த்தையை துவங்கினார்கள்.
மும்பை இந்தியன்ஸுக்கு, நேதன் எல்லிஸை விட்டுக்கொடுத்த ஜாகீர் கான் முடிவு செய்த நிலையில், எங்களுக்கு எல்லிஸ் வேண்டாம், அன்ஷுல் கம்போஜ்தான் வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கலீல் அகமது அல்லது ஷிவம் துபேவை மும்பை இந்தியன்ஸுக்கு அனுப்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த டிரேடிங் டீலுக்கு மும்பை இந்தியன்ஸுக்கு ஓகே சொல்லிவிட்டதாம். தற்போது, பேப்பர் ஒர்க் வேலை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தற்போது ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ள சிஎஸ்கே நிர்வாகம், ரசிகர்களுக்கு ஒரு செய்தியை கொடுத்துள்ளது. அதில், ‘‘நீங்கள், டீகோட் செய்வதில் வல்லவர்கள்தான், என இரவு 10:33 மணிக்கு ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளது.
33 என்பது, ஹர்திக் பாண்டியாவின் ஜெர்சி எண். அதேபோல், 10 என்பது, தற்போது இருக்கும் அக்டோபர் மாதம். இதன்மூலம், இம்மாத இறுதியிலேயே ஹர்திக் பாண்டியா, அதிகாரப்பூர்வமாக சிஎஸ்கேவில் இணைவார் எனக் கருதப்படுகிறது.
மேலும், சமீப காலமாகவே 3 என்ற எண்ணை வைத்து, சிஎஸ்கே சில பதிவுகளை வெளியிட்டு வருகிறது. இதனால், ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கே வருவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
கேப்டன் யார்? ஹர்திக் பாண்டியா சிஎஸ்கேவுக்குள் வந்தால், கேப்டனாக யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கேப்டனாக, தற்போது ருதுராஜ் கெய்க்வாட் இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியாவும் கேப்டன் பதவியை கேட்க வாய்ப்புள்ளது. கடந்த சீசனில், ருதுராஜ் கெய்க்வாட், 123 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடியிருந்தார். இதனால், இவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, மாற்றாக ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுப்பார்களா அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டிற்கே கேப்டன் பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
