த்ரிஷாவுக்கு ஊரை கூட்டி கல்யாணம் நடக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு: அனிருத் திருமணத்தை சரியாக கணித்த ஜோதிடர் – tarot reader jayasree predicts trisha krishnan wedding

த்ரிஷா கிருஷ்ணனுக்கு திருமணம் நடக்குமா,நடக்காதா என்று ஜாதகத்தை பார்த்து கணித்துச் சொல்லியிருக்கிறார் ஜெயஸ்ரீ. அனிருத் ரவிச்சந்தரின் திருமணத்தை சரியாக கணித்தவர் தான் இந்த ஜெயஸ்ரீ.

இசையமைப்பாளர் அனிருத்துக்கு காதல் திருமணம் நடக்கும் என்பதை 13 ஆண்டுகளுக்கு முன்பு கணித்த ஜெயஸ்ரீ தற்போது த்ரிஷாவின் திருமணத்தை கணித்து சொல்லியிருக்கிறார்.

அனிருத் கல்யாணம்
த்ரிஷா திருமணம்

த்ரிஷா கிருஷ்ணன் திருமணம் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜெயஸ்ரீ. அதில் அவர் கூறியிருப்பதாவது, த்ரிஷா ஜாதகத்தில் மேஷத்தில் இருந்து ஏழாம் வீட்டில் சனி. ஏழாம் அதிபதி சுக்ரன் வந்து ராகு உடன் இருக்கிறார். அந்த மாதிரி இருந்தால் எல்லோரையும் அழைத்து ஃபார்மலாக திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என தெரிவித்துள்ளார். த்ரிஷாவுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும் என நம்பும் ரசிகர்கள் இதனால் மனமுடைந்து போயிருக்கிறார்கள்.

சிங்கிள் லேடி

43 வயதாகும் த்ரிஷா கிருஷ்ணன் தனக்கு கல்யாணம் நடக்கும்போது நடக்கட்டும் என்று இருக்கிறார். அவருக்கு விவாகரத்து செய்து பிரிந்து வாழ்வதில் உடன்பாடு இல்லை. அதனால் கழுத்தில் தாலி ஏறிவிட்டால் கடைசி வரை கணவருடன் தான் வாழ வேண்டும் என்று நினைக்கும் ஆள். எனவே, திருமணம் செய்யும் முன்பு 100 முறை யோசிப்பேன் என அவரே முன்பு பேட்டியில் தெரிவித்தார். த்ரிஷாவுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் நின்றது. அதன் பிறகு அவரின் கவனம் கெரியரில் மட்டும் தான் உள்ளது.

கோவையில் த்ரிஷா

த்ரிஷா கோவையில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு செல்ல அவர் வருவது அறிந்து மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அடேங்கப்பா, த்ரிஷாவுக்கு கூடிய கூட்டத்தை பார்த்தால் அவர் தாராளமாக அரசியலுக்கு வரலாம் போலயே என மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தன்னை காண வந்த கூட்டத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு சந்தோஷப்பட்டிருக்கிறார். அது போக இன்ஸ்டா ஸ்டோரியிலும் கோவை ரசிகர்கள் அலை வீடியோக்களாக தொடர்ந்து போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார் சவுத் குயின்.

ரஜினிகாந்த் 50 ஆண்டுகள்
சிவப்பு கலர் சேலை

Source link