த.வெ.க. அரசுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டு

சென்னை,

திருநீர், ருட்த்ராட்சை உடன் திருவள்ளுவரை வரைந்ததற்காக த.வெ.க. அரசுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவரின் ஓவியம்

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.

இந்து மத அடையாளங்கள்

கடந்த கால தி.மு.க. அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்மக் கோட்பாடுகளை இழிவாகப் பேசியும் வந்த நிலையில் தற்போது இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி.

திருப்பரங்குன்றம்

மேலும் தொடர்ந்து இந்து மத வழிபாட்டுத் தலங்களான தாய் மூகாம்பிகை கோவில், கனகதுர்க்கை கோவில் என சென்று வழிபட்டு வரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மரபினைப் பின்பற்றி தீபத் தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link