ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். இந்த ராசியினர் இயல்பிலேயே அமையாதவர்களாகவும், நிலையான மன நிலை கொண்ட குணம் கொண்டவர்கள். இவர்கள் எந்த செயலையும் கவனமாகவும், நிதானமாக ச்யெது முடிக்கக்கூடியவர்கள். அதனால் எப்போதும் நிதி ரீதியாக நிலைத்தன்மையுடன் இருப்பார்கள்.
பணம் சம்பாதிக்கக்கூடிய கலையை தெரிந்தவர்கள் என்பதால், வேலை, தொழில் என எதை செய்தாலும் அதில் தனக்கென ஒரு முத்திரைப் பதிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் ரியல் எஸ்டேட், வங்கித் துறை, ஆடம்பரப் பொருட்கள் விற்பனை போன்ற விஷ்யாங்களில் சிறந்து விளங்குவார்கள். மேலும் எந்த துறையில் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பார்கள்.
கடக ராசி
கடக ராசியினர் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், மென்மையான குணம் கொண்டவர்கள். இவர்கள் தங்களுடைய குடும்பத்தினர் மீது மிகுந்த அக்கறையும், அன்பும் கொண்டிருப்பார்கள். சந்திரனை அதிபதியாக கொண்ட இவர்கள் தனிமனித வாழ்க்கையிலும், வேலை, தொழில் என எதில் ஈடுபட்டாலும் மேன்மை அடையக்கூடிய விதத்தில் செயல்படுவார்கள்.
குபேரனின் அருள் நிறைந்த இவர்களுக்கு பண பற்றாக்குறை ஒரு போதும் ஏற்படாது. ஏதேனும் ஒரு வழியில் பண வரவு பெறுவார்கள். இவர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், முடிவுகளில் நிலையில்லாமல் சில நேரங்களில் மனநிலையை மாற்றிக் கொள்வார்கள். அதை தவிர்த்து நிதானமாக, தீர்க்கமாக முடிவெடுப்பதும், தன வரவை சரியாக செமிக்க முயற்சி செய்வதால் உங்களுடைய நிதி நிலை முன்னேற்றம் அடையும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். சுக்கிரன் மற்றும் குபேரனின் அருளால், இந்த ராசியினர் எந்த துறையில் செயல்பட்டாலும் அதில் சிற்ந்து விளங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் பெரிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டால், அதை அடையும் வரை ஓயமாட்டார்கள். இவர்களுடைய மனநிலை எப்போதும் சமநிலையில் இருப்பதால், கடினமான சூழலைக் கூட நிதானமாக அனுகுவார்கள். அதனால் இவர்களின் செல்வ நிலை நிலைத்து இருக்கும். வாய்ப்பும், வசதிகளும் தேடிவரும்.
குபேரன் மற்றும் சுக்கிர பகவானின் அருளால், இவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிந்தனையில் உயர்ந்தவர்களாகவும், செயல்களில் மிகுந்த தன்னம்பிக்கை இருக்கும். இவர்களின் கடின உழைப்பு நல்ல பலன்களைத் தரும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய் ஆவார். அதனால் இந்த ராசியினர் எந்த செயலையும் தைரியமாகவும், ஆற்றலுடனும் செய்து முடிப்பார்கள். அதனால் வேலை, தொழில் என எந்த துறையில் இருந்தாலும் அவர்கள் கடினமான சூழலைக் கூட தங்களின் கடின உழைப்பு, ஆற்றலால் அதில் வெற்றி பெற்று ஜொலிப்பார்கள்.
குபேரனின் அருள் நிறைந்த இவர்கள் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெற முயற்சிகளை அதிகரிப்பதும், சூழலுக்கு ஏற்ற விதத்தில் தங்களை மாற்றிக் கொள்வதும், திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி அடைந்திட முடியும். இவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.
தனுசு ராசி
தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் ஆவார். இவர்களின் சொல், செயலில் நிதானமும், மிகுந்த நம்பிக்கையுடன் செயல்படுவார்கள். ஆன்மீகத்தின் மீது அதீத நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் செய்யக்கூடிய எந்த ஒரு செயலிலும் மிகுந்த உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும், லட்சியத்துடனும் மேற்கொள்வது இவர்களின் இயல்பு. இதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் நினைத்த நிலையை அடைகிறார்கள்.
தங்களின் செயல்களில் மட்டுமல்லாமல், குழு செயல்பாடுகளில் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் நபர்களாகத் திகழ்கிறார்கள். சிறந்த செயல்பாடு, யோசனைகளால் இவர்களுக்கு நிதிச் சிக்கல்கள் இருக்காது. அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் சிறந்த யோசனைகள், செயல்களால் கவரும் தன்மையால், அவர்களுக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர்.
குறிப்பு:
இங்கே வழங்கப்பட்டுள்ள ஆன்மீக மற்றும் ஜோதிடத் தகவல்கள், அத்துடன் பரிகாரங்கள் அனைத்தும் ஜோதிடம் மற்றும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்தத் தகவல்களைக் கருத்தில் கொள்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நிபுணர்களை அணுகி முழுமையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
