ஷாமா பேட்டி : பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறப்பட மாட்டார் என நினைத்தோமோ அந்த ஷாமா வெளியேற்றப்பட்டார். அவரை திரும்ப அழைத்து வருமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர் தமிழ் சமயத்திற்கு பேட்டி அளித்தார்.
ஷாமா நம்மிடம் கூறியதாவது, நான் வெளியேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. நான் வெளியேற்றப்பட மாட்டேன் என்று நினைத்தேன். எவிக்ஷன் கார்டில் என் பெயரை பார்த்தபோது ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. என்னை விட ஹவுஸ்மேட்ஸுக்கு பயங்கர அதிர்ச்சி. அவர்களுக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்திருந்தாலும் கூட அதிர்ச்சி அடைந்தார்கள். என்னுடைய கேமை உள்ளே எல்லோரும் பாராட்டுவார்கள். ஜேசன் தான் நான் அவனின் கேம் பிடிக்கவில்லை என்றதும் உன் கேம் எனகுக்கு பிடிக்கலனு சொன்னான்.
ஜேசன் சேட்டை: ஜேசனுக்கு இப்போ சந்தோஷமாக இருக்கும். எளிதில் எல்லோரையும் மண்டைய கழுவலாம். ஜேசன் அவன் உயரத்தை வைத்தே மிரட்டுவான். அவனை தள்ளிவிட்டு அடிக்க ஒரு நிமிடம் ஆகாது. இருந்தாலும் கன்ட்ரோல் பண்ணிக்குவேன். ஜேசன் அருகில் வந்து மிரட்டும்போது ஒரு ஸ்டெப் பின்னாடி தான் போக வேண்டும். ஜேசனின் கேம் எனக்கு பிடிக்காது. அவனையே பிடிக்காது. ஒரு பர்சனாக நல்லவன் தான். அவன் கேம் தான் எனக்கு முக்கியமாக பிடிக்காது என்றார்.
முனியம்மா எப்படி?: முனியம்மா நடந்து கொள்வது ரொம்ப போலியாக இருப்பதாக உணர்கிறீர்களா என கேட்டதற்கு ஷாமா கூறியதாவது, போலி என சொல்ல மாட்டேன். இது செய்தால் போகும் என கால்குலேட் செய்து விளையாடுவாங்க. இதை செய்தால் திட்டு விழும் என தெரிந்தாலும் அதுக்கென்ன திட்டு வாங்கிக்கலாம் என இருப்பார். தவறு செய்தால் அதை திருத்த மாட்டார். ட்ரிக்கர் கேம் பண்ணுவாங்க. திட்டமிட்டு எதையும் செய்ய மாட்டாங்க.
பயந்தேன்: வாசன், ஜேசன் சண்டையை விட வாசன், முகேஷ் சண்டையை பார்த்து ரொம்ப பயமாக இருந்தது. முகேஷ் விஷயத்தில் விட்டிருந்தால் அவருக்கு அடிபட்டிருக்கும். அந்த நேரத்தில் ஜேசனால் கூட வாசனை கட்டுப்படுத்த முடியவில்லை. வாசன் தன் கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் வெளியே வந்துவிடுவார். அப்புறம் ஜேசனிடம் கப்பை கொடுத்துவிடுவார்கள். அதை நான் உடைத்துவிடுவேன் என்றார்.
ஒயில்டு கார்டு மூலம் உள்ளே போகச் சொல்லி பிக் பாஸ் அழைத்தால் செல்வீர்களா என்றதும் ஷாமாவோ, ஆசை இருக்கிறது. கண்மூடித்தனமாக சரி என சொல்ல மாட்டேன். முதல் முறை அனுபவத்திற்காக சென்றேன். இப்போ எக்ஸ்பீரியன்ஸுக்காக போக மாட்டேன். என் கெரியரை மனதில் வைத்து யோசித்து முடிவு செய்வேன் என்றார்.
அது ஏன் எப்பொழுது பார்த்தாலும் ஜேசனுக்கும், ஷாமாவுக்கும் இடையே தான் சண்டை வருகிறது என்கிற கேள்விக்கு அவர் கூறியதாவது, அது அப்படித் தான் ஆகிவிட்டது. நாங்கள் சண்டை போட்டால் நல்லா இருக்கா என்னனு தெரியல. அவனை நான் பாராட்டினால் சூப்பர் என்பான். விமர்சித்தால் நீ எதுக்கும் லாயக்கில்லை என சொல்வான்.
அந்த படுக்கை: சாந்தினி, நான் எல்லாம் இருந்தது ஒரு cursed பெட். சவின்யா அந்த பெட்டில் தான் இருந்தாள். அடுத்து சாந்தினி. நான் வரட்டுமா என ப்ரித்வி கேட்டான். ஆனால் ரெட் டீம், ப்ளூ டீம் பார்டிஷன் வந்ததால் வரவில்லை. இனி யாரும் அந்த பெட்டில் படுப்பாங்களா என தெரியவில்லை. அந்த பெட்டில் இருந்தால் எவிக்ஷனாகிவிடுகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
வாசனுக்கு ரெட் கார்டு: லட்சுமி ப்ரியா திரும்பி வந்த பிறகு என்ன மாற்றம் இருக்கிறது என கேட்டதற்கு, அவரிடம் முன்பு இருந்த ஃபயர் இப்போ இல்லை. இதே மாதிரி ஸ்லோவாக போனால் கொஞ்சம் கஷ்டம். வினோத் பாபு, ஜேசன் அல்லது முனியம்மா, டிடிஃப் வாசன் தான் டாப் மூன்று போட்டியாளர்கள் என நினைக்கிறேன். ப்ரித்வி டைட்டில் வாங்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் இன்னும் சூப்பராக விளையாடினால் வினோத் அண்ணாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. வாசன் கோபம் குறையாவிட்டால் விரைவில் ரெட் கார்டு வாங்கிவிடுவார் என்றார்.
Source link
