திமுகவின் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.100 கோடி லஞ்சப் புகார் விவகாரத்தில் சிக்கி, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், அவரது மூன்றாவது காவல் காவல் தொடர்பான விவகாரம் நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரூ.100 கோடி லஞ்சப் புகார்: அன்பில் மகேஷ் கைது
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவது தொடர்பாக ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அன்பில் மகேஷ் கடந்த 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தொடங்கிய விசாரணை
இந்த விவகாரம் முதலில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறிப் பணம் பெற்றுக்கொண்டு, அங்கீகாரம் வழங்காமல் அலைக்கழித்ததாகக் கூறப்படும் திமுக செய்தித் தொடர்புத் துணைத் தலைவர் பிடி அரசகுமாரன் மீது அளிக்கப்பட்ட புகாரிலிருந்து தொடங்கியது.
தற்போது அவர் ஜாமீனில் உள்ள நிலையில், அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அன்பில் மகேஷுக்குத் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்தச் சோதனையில் அன்பில் மகேஷுக்கு எதிரான மின்னணு ஆதாரங்கள் வலுவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட முத்துக்குமார்
இந்த மோசடி தொடர்பாக முத்துக்குமார் என்பவர் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சூழலில், தொழிலதிபர் சண்முகபிரியாவை ஏற்கெனவே போலீசார் தேடி வந்தனர்.
சண்முகபிரியாவின் வீடு, அலுவலகங்களில் கண்காணிப்பு
கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் சண்முகபிரியாவின் நீலாங்கரை மற்றும் பெருங்குடியில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் என நான்கு இடங்களில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
பெருங்குடி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
இந்தச் சூழலில்தான் அன்பில் மகேஷ் மீதானரூ.100 கோடி லஞ்சப் புகார்விவகாரத்தில், சண்முகபிரியாவின் பெருங்குடி இல்லத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், உமாசங்கர் என்ற ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோதுதான் சண்முகபிரியா குறித்த தகவல்கள் கிடைத்ததாகவும், அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவர் aphrodite drapes என்ற துணிக்கடை நடத்தி வருகிறார்.
திமுகவுக்கு Prty Fund?
திமுகவுக்குப் பல தவணைகளில் கட்சிப் பணமாக லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சண்முகபிரியாவுக்குச் சொந்தமானதாகக் குறிப்பிடப்படும் ராம்ஸ் ராக ஸ்ரீ விலாஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் போலீசார் தீவிரச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சண்முகபிரியாவின் பின்னணி
அன்பில் மகேஷுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.100 கோடி லஞ்சப் புகார் விவகாரத்தில், துணிக்கடை அதிபராக இருக்கக்கூடிய சண்முகபிரியாவின் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை கவனம் பெற்றுள்ளது. மேலும், அவரது பின்னணி மற்றும் இந்த வழக்கில் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Source link
