கமல் ஸ்டைல்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் இருந்து 7வது சீசன் வரை அதை தொகுத்து வழங்கினார் விண்வெளி நாயகன் கமல் ஹாசன். அவர் தொகுத்து வழங்கிய விதம் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. வார இறுதி நாட்கள் வந்தால் கமலை பார்க்க, அவர் பேசுவதை கேட்கவே பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்தார்கள். கமல் அணிந்த உடைகள் இன்றும் பிரபலம்.
பிக் பாஸ் மேடையில் சினிமா, அரசியல், வாழ்க்கை என பல விஷயங்களை பற்றி பேசினார். அப்படி அவர் பேசியது பற்றியும், போட்டியாளர்கள் விஷயத்தில் நடந்து கொண்டதையும் வைத்து அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள். இருந்தாலும் கமல் தான் வேண்டும் என்று மக்கள் தெரிவித்தார்கள்.
கமல் ஆப்சன்ட்: இந்நிலையில் தான் பிக் பாஸ் ஷோவில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டார் கமல். பிரேக் தானே என நினைத்தால் அவர் நிரந்தரமாக பிரேக் எடுத்துவிட்டார். கமலுக்கு பதிலாக எட்டாவது சீசனை தொகுத்து வழங்க வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தற்போது 10வது சீசனையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக 8வது சீசன் நிறைவடைந்ததும் 9வது சீசனுக்கு கமல் திரும்பி வந்துவிடுவார் என்றே பிக் பாஸ் பார்வையாளர்கள் நம்பினார்கள். 9வது சீசனுக்கும் விஜய் சேதுபதி வந்த பிறகே இனி கமலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்கவே முடியாது என்பது மக்களுக்கு புரிய ஆரம்பித்தது.
இருந்தாலும் கூட 10வது சீசனில் கமல் வந்துவிட மாட்டாரா என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். இந்நிலையில் தான் பிக் பாஸுக்கு கண்டிப்பாக கம்பேக் கொடுக்கிறாராம் ஆண்டவர் என பேச்சு கிளம்பியது. படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்யும் கமலுக்கு பிக் பாஸுக்கு டேட்ஸ் கொடுக்க நேரம் இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்தது.
கமல் வரவில்லை: இந்நிலையில் கமல் ஹாசன் அவர்கள் பிக் பாஸுக்கு திரும்பி வரவில்லை என்று அவரின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தெரிவித்திருக்கிறது. 2027ம் ஆண்டு இறுதி வரை கமலிடம் டேட்ஸ் கிடையாது. அந்த அளவுக்கு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அவரை பார்த்ததும் கமல் ஹாசன் தான் நினைவுக்கு வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கமலுக்கு பதிலாக ஒரு முறை ரம்யா கிருஷ்ணன் வந்திருந்தார். 5 சீசன்கள் கழித்து மீண்டும் ரம்யா கிருஷ்ணனை பார்த்ததும் பழைய விஷயங்கள் எல்லாம் பார்வையாளர்களுக்கு கண் முன்பு வந்து போனது. கமல் திரும்பி வந்தால் நல்லா இருக்குமே என பேச ஆரம்பித்தார்கள்.
விஜய் சேதுபதி விமர்சனம்: விஜய் சேதுபதி தன்னுடைய 100 சதவீத ஈடுபாட்டுடன் தொகுத்து வழங்கி வருகிறார். இருந்தாலும் அவரால் கமல் ஹாசன் போன்று வார்த்தைகளில் விளையாட முடியவில்லை. போட்டியாளர்களை கையாள முடியவில்லை என்கிற விமர்சனம் 8வது சீசனில் இருந்தே தொடர்கிறது. அவர் எது செய்தாலும் அதை கமலுடன் ஒப்பிட்டு பேசுவது இன்னும் நின்றபாடில்லை.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இதற்கிடையே டாஸ்க்கின்போது சமைக்கும் பாத்திரத்தால் டிடிஎஃப் வாசனை அடித்த அக்ஷிதா அசோக்கிற்கு ரெட் கார்டு கொடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை தெரிந்து கொள்ள வார இறுதி வரை காத்திருக்க வேண்டியது தான்.
Source link
