தமிழக அரசு துறைகளுக்கு சொந்தமான அரசு வாகனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் உதிரி பாகங்கள் மாற்றும் செலவுக்கான உச்சவரம்பை (Ceiling Limit) அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 3.08.2004 ஆம் ஆண்டு பெட்ரோல் லைட் வாகனம், டீசல் லைட் வாகனம், ஹெவி டீசல் வாகனம் ஆகியவற்றுக்கு ரிப்பேர் செலவு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 20 வருடமாக இதே விலை தான் இருந்தது. கடந்த 15.11.2024 ஆம் ஆண்டு அரசு வாகனங்கள் வாங்குவது, பராமரிப்பது, பயன்படுத்துவது, வாடகைக்கு எடுப்பது தொடர்பான கொள்கைகளை சீரமைக்க கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 25.06.2025 அன்று கூடி, கடந்த 20 ஆண்டுகளில் வாகன விலை, உதிரி பாகங்கள் விலை, சர்வீஸ் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளதால், ரிப்பேர் செலவு உச்சவரம்பை உயர்த்த பரிந்துரைத்தது.
புதிய உயர்வு எவ்வளவு? கமிட்டி பரிந்துரை
அதன்படி Light Motor Vehicles – Lower-End (Bolero, Spacio, Tata Victa etc.)100%, Light Motor Vehicles – Higher-End(Innova, Innova Crysta, Honda City etc.)200% , Heavy Motor Vehicles (Leyland, Benz, Swaraj Mazda, Eicher etc.)100% உயர்த்தப்பட்டுள்ளது.
Rule 15(2) என்ன சொல்கிறது?
Tamil Nadu Departmental Vehicles Control Rules, 1976 விதி 15(2)-ன் படி, அரசு வாகனத்திற்கு பொறுப்பான அதிகாரி, குறிப்பிட்ட வரம்புக்குள் ரிப்பேர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் செலவை அரசு ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பை அணுகாமலேயே செய்யலாம். அந்த வரம்பு தான் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இனி Innova, Honda City போன்ற உயர்ரக அரசு கார்களுக்கு 3 மடங்கு செலவு செய்யலாம். சாதாரண பொலிரோ, லாரி, பஸ்களுக்கு 2 மடங்கு செலவு செய்யலாம்.
20 வருட விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரசு வாகனங்கள் திறமையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
