ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா… 3-வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி

வதேரா,

3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

பேட்டிங்

இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

131 ரன்கள்

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீராங்கனைகள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 39.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வைஷ்ணவி சர்மா

இந்திய அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் வைஷ்ணவி சர்மா ஒருநாள் போட்டிகளில் தனது முதல் ஐந்து விக்கெட் சாதனையை அவர் பதிவு செய்தார். இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது.

ஷபாலி வர்மா

தொடக்க வீராங்கனை யாஷ்டிகா பாட்டியா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பிரதிகா ராவலும் ஷபாலி வர்மாவும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இருவரும் ஜிம்பாப்வே பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தனர்.

ஷபாலி வர்மா 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். பிரதிகா ராவல் 56 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார். ஹர்லீன் தியோல் 19 ரன்கள் சேர்த்தார்.

17 ஓவர்களில் வெற்றி

இறுதியில் இந்திய மகளிர் அணி 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

Source link