கொல்கத்தா,
கொல்கத்தா ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.13.5 கோடி மதிப்பிலான 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈ-சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
2 கண்டெய்னர்கள்
நேபாள நாட்டில் இருந்து கொல்கத்தா துறைமுகத்திற்கு ஒரு கப்பல் வந்தது. அந்த கப்பலில் இருந்த 2 கண்டெய்னர்கள் மீது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த பெட்டகங்களை திறந்து சோதனையில் ஈடுபட்டனர்.
55 ஆயிரம் ஈ-சிகரெட்டுகள்
அப்போது, ஒரு பெட்டகத்தில் 40 ஆயிரம் ஈ-சிகரெட்டுகளும், மற்றொரு பெட்டகத்தில் 15 ஆயிரம் ஈ-சிகரெட்டுகளும் என மொத்தம் 55 ஆயிரம் ஈ-சிகரெட்டுகள் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.120 கோடி பறிமுதல்
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட அனைத்து ஈ-சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மொத்த மதிப்பு ரூ.13.5 கோடியாகும். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 லட்சம் ஈ-சிகரெட்டுகள்
நடப்பு 2026-27 நிதியாண்டில் மராட்டியம், குஜராத், டெல்லி மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், மொத்தம் ரூ.120 கோடி மதிப்பிலான சுமார் 3 லட்சம் ஈ-சிகரெட்டுகள் வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
