தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான இனிப்புகளின் விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. நெய் பாதுஷா, ஸ்பெஷல் நட்ஸ் அல்வா, காஜூ பிஸ்தா ரோல், காஜூ கத்லி உள்ளிட்ட இனிப்புகள் 250 கிராம் அளவில் ரூ.200 முதல் விற்பனை செய்யப்படுகின்றன.
தீபாவளியை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், இந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் இனிப்புகளின் விலை தொடர்பான புதிய பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
மொத்தம் ஆறு இனிப்புகளின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான பட்டியலை ஆவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது,
இனிப்பு வகை எடை புதிய அதிகபட்ச சில்லறை விலை நெய் பாதுஷா (Ghee Badusha) 250 G ₹205 ஸ்பெஷல் நட்ஸ் அல்வா (Special Nuts Halwa) 250 G ₹200 முந்திரி பிஸ்தா ரோல் (Kaju Pista Roll) 250 G ₹340 முந்திரி கத்லி (Kaju Katli) 250 G ₹280 கலவை இனிப்புகள் (Assorted Sweets) 250 G ₹240 கலவை இனிப்புகள் (Assorted Sweets) 500 G ₹475
Source link
