இந்தோனேசியாவில் காட்டுத்தீயை அணைத்த பெருமழை: நடுரோட்டில் மண்டியிட்டு தீயணைப்பு வீரர்கள் வழிபாடு

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தான் பகுதியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மழையின்றி, கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதனால் அங்குள்ள காடுகளில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது.

நச்சு புகைமூட்டம்

நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் இரவு பகலாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி வந்தனர். காடுகளிலிருந்து வெளியேறிய நச்சு புகைமூட்டம் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் வரை பரவி மக்களை கடுமையாக பாதித்தது.

கொட்டித்தீர்த்த கனமழை

எல் நினோ தாக்கத்தால் அணைக்க முடியாமல் திணறிய காட்டுத்தீக்கு மத்தியில், ஞாயிற்றுக்கிழமை பெய்த இந்தத் திடீர் கனமழை வீரர்களுக்கு கொடுத்த எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்த வீரர்கள்.

இறைவனுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி

வீரர்கள் நெகிழ்ச்சி வழிபாடு மழை பெய்ததை கண்டவுடன் தீயணைப்பு வீரர்கள் தங்களின் எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கனமழையில் நனைந்தபடியே, தங்களின் பாதுகாப்பு உடைகளுடன் சாலையிலேயே மண்டியிட்டு விழுந்து இறைவனுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி செலுத்தினர்.

அணைக்க முடியாத தீயை அணைத்த மழையை கண்டு வீரர்கள் இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, பார்ப்போரை நெகிழ செய்து வருகிறது.

Source link