தமிழக தேர்தல் 2026 NDA கூட்டணி
இந்த நிலையில்,தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது.இந்த நிலையில், தமிழகத்திற்கு பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ பிரச்சாரத்திற்கு வருகை தரவில்லை.இதற்கு காரணம், கேரளா மற்றும் அசாமில் தேர்தல் நடைபெறுவதால், தமிழ்நாட்டிற்கான பிராச்சாரத்தை தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview
பிரதமர் மோடி தமிழகம் வருகை
இத்தனைய சூழலில் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்க்கொள்ள தமிழகம் வருகைத்தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அதன்படி, ஏப்.15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் வரும் பிரதமர் மோடி அங்கு சாலை வலம் மேற்கொள்கிறார்.
- திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மாலை 4 மணிக்கு -நாகர்கோவில் வருகிறார்.
- மாலை 5 மணிக்கு வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்துகிறார்.
கோவையில் பொதுக்கூட்டம்
கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வரும் 18ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக முன்னேற்பாடுகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று பாஜக சார்பில் பொதுக்கூட மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் பாஜக நிர்வாகிகள் முழு வீச்சில் செய்து வருகின்றன இதற்கிடையில் நாளை பாஜக செயல்பிரர்களுடன் வாக்கு சாவடி பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
பிரதமர் மோடி பதிவு
இது குறித்து அவர் வெளியேற்றுள்ள எக்ஸல பதிவில் கூறியிருப்பதாவது : திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பிஜேபி செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து திமுக அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்ற பிம்பத்துடன் வாக்கு சேகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை பாஜக பெரும்பான்மையை காட்ட முடியாத சூழலில் உள்ளது. தொடர்ந்து பாஜக மதவாத அரசியல் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இதனை எவ்வாறு தேர்தலில் பாஜக எதிர்க்கொள்ள உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
