Mumbai Indians – ஹர்திக்கை வெளியே அனுப்பினால், என்னையும் நீக்கிடுங்க: MI முக்கிய வீரர் திடீர் போர்கொடி – mumbai indians star player want to leave if hardik pandya does not get captaincy

மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பெரிய பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை, குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து டிரேடிங்கில் வாங்கியதில் இருந்தே, அந்த அணியில் பிரச்சினை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

திடீரென்று ரோஹித் சர்மாவின் பதவிவை பறித்து, ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுத்ததால், ரோஹித் அதிருப்தியில் இருந்தார். அதன்பிறகு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி பெரிய அளவில் விமர்சனத்தை பெற ஆரம்பித்தது. மேலும், கடந்த ஐபிஎல் 2026 சீசனில், ஹர்திக் பாண்டியா, அணியை முழுவதும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். அவர் விரும்பும்படிதான், வீரர்கள் விளையாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது, நிர்வாகத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அப்படி விளையாடி, இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 9ஆவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. மேலும், கடந்த சீசனில், ஹர்திக் பாண்டியாவின் காதலி, மேகிகா சர்மாவின் தலையீடும் இருந்தது. ஒருமுறை, போட்டி முடிந்தப் பிறகு வீரர்கள் அனைவரும் பேருந்தில் ஏறி புறப்பட தயாரானபோது, வேண்டுமென்றே மேகிகா சர்மா, 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்து, பேருந்தில் ஏறிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இப்படி, கடந்த சீசனில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தது. இதனால், அதிருப்தியடைந்த அணி நிர்வாகம், ஹர்திக்கை கழற்றிவிட முடிவு செய்தது. இதனால், கடந்த சீசன் முடிந்ததுமே பேட்டிகொடுத்த அந்த அணியின் பேட்டிங் கோச் கெய்ரன் பொல்லார்ட், ‘‘ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி, எங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை’’ என ஓபனாக பேசினார்.

இதனால், கடும் அதிருப்தியில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, டிரேடிங்கில் வெளியேறுவதில் உறுதியாக இருக்கிறார். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை அணியில் இருந்து நீக்கினால், என்னையும் அணியில் இருந்து நீக்கிவிடுங்கள் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு நமன் தீர் அதிரடி கோரிக்கையை முன் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்குள் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாக கூறப்படுகிறது. நமன் தீர், ஐபில் 2024 சீசனின்போது தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் வந்தார். இப்போதுதான், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கிடைத்தது.

குறிப்பாக, மினி ஏலத்தில், நமன் தீரை வாங்க வேண்டும் என கேப்டன் ஹர்திக் பாண்டியாதான் பரிந்துரைத்தார் எனக் கூறப்படுகிறது. அதன்பிறகு, ஹர்திக் பாண்டியா, நமன் தீர் இடையில் நட்புறவு அதிகரித்ததாகவும், அதனால்தான், தற்போது ஹர்திக்கை டிரேடிங்கில் அனுப்பினால், தன்னையும் அனுப்பிவிடுங்கள் என நமர் தீர் தெரிவித்திருப்பதாக கருதப்படுகிறது.

நமன் தீர் அபாரம்: இந்திய டி20 அணியில், நமன் தீர் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி வருகிறார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பட்டையை கிளப்புகிறார். குறிப்பாக, சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார்.

இந்த இரண்டு தொடர்களுக்கு முன்புவரை, நமன் தீருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காத நிலையில், தற்போது நிரந்தர இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், நமன் தீர், இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்.

Source link