நயன்தாரா இல்லாமல் நடந்த மூக்குத்தி அம்மன் 2 விழா: டாக்சிக், ஹாய் விழாக்களுக்கு வந்தவர் இப்போ ஏன் வரல?

மூக்குத்தி அம்மன் 2: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் வெற்றி பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என பலரும் கேட்ட நிலையில் அப்டேட் வந்தது. ஆனால் மூக்குத்தி அம்மன் 2 படத்தை ஆர்.ஜே. பாலாஜி இல்லை பைசா வசூல் இயக்குநர் என பெயர் எடுத்த சுந்தர் சி. இயக்கியிருக்கிறார்.

பான் இந்திய படமாக உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் 2-ஐ தன்னுடைய வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார் ஐசரி கணேஷ்.சுந்தர் சி. படங்கள் என்றால் ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் இசை. இந்நிலையில் இந்த படத்திற்கும் அவர் தான் அற்புதமாக இசையமைத்திருக்கிறார்.

நயன்தாரா மிஸ்ஸிங்: தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் 6ம் தேதி படம் வெளியாகவிருக்கும் நிலையில் அதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை சென்னையில் பிரமாண்டமாக நடத்தினார்கள். அந்த விழாவுக்கு நயன்தாரா என்ன உடை அணிந்து வருவார், மேடையில் என்ன பேசுவார் என்பதை பார்க்க சினிமா ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் மூக்குத்தி அம்மன் 2 விழாவில் நயன்தாராவை பார்க்க முடியவில்லை.

தான் போலீசாகவும், கடவுளாகவும் நடித்திருக்கம் படத்தின் நிகழ்ச்சிக்கு நயன்தாரா ஏன் வராமல் இருந்துவிட்டார்?. அவர் மட்டும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. முன்னதாக படங்களில் நடிப்பதோடு சரி. அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் நயன்தாரா. அதனால் அவரின் புதுப்பட விழாக்கள் நடந்தால் ரசிகர்கள் யாரும் அவரை எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது தற்போது எதிர்பார்ப்பு ஏற்பட காரணமே நயன்தாரா தான்.

டாக்சிக், ஹாய்: அதாவது அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஹாய் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவ்வளவு அழகாக பேசினார். ஹீரோ கவின், ஹீரோயின் நயன்தாரா அந்த படத்தை விளம்பரம் செய்த விதத்தை யாரும் மறக்கவில்லை. நயன்தாரா பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போன்று. அவர் தன்னுடைய அனைத்து படங்களையும் இப்படி பேசிப் பேசி விளம்பரம் செய்தால் நன்றாக இருக்கும் என்றார்கள் ரசிகர்கள்.

ஹாய் படத்திற்கு முன்பு பெங்களூரில் நடந்த டாக்சிக் விழாவில் ஆரஞ்சு கலர் சேலையில் கலந்து கொண்டு பேசினார். விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வரக் கூடாது என்று இல்லை, என்ன பேசுவது என்று எனக்கு தெரியாததால் வருவது இல்லை. தற்போது ஹீரோ யஷ் கூப்பிட்டதால் வந்தேன் என்றார். பேசத் தெரியாது என்று சொன்னபோதிலும் மேடையில் ரொம்ப தெளிவாகப் பேசி கைதட்டல்களை பெற்றார்.

ரசிகர்கள் ஏமாற்றம்: தொடர்ந்து இரண்டு படங்களை விளம்பரம் செய்ததால் தான் மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் விளம்பரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் இது நயன்தாரா கதாபாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் நயன்தாரா வராமல் போனதால் தான் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

நயன்தாரா போஸ்ட்: மூக்குத்தி அம்மன் 2 நிகழ்ச்சி துவங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் நயன்தாரா. அதில் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார். ரெஜினா கசாண்ட்ரா, குஷ்பு சுந்தர், சினேகா ஆகியோரை பற்றி பெருமையாக பேசியிருந்தார். மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்ததை நினைத்து நெகிழ்ந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு வராமல் இருக்கத் தான் இந்த அறிக்கையா நயன்தாரா என்று தற்போது சமூக வலைதளங்களில் கேட்கிறார்கள்.

Source link