யார் இந்த கலையரசன்? விலைவாசி உயர்வு குறித்து பேசியதற்கு கைது: அதிகாலையில் வீடு தேடி வந்த போலீஸ் – who is economist kalaiyarasan police visit his home early morning amid controversy over rising price remarks

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்திருக்கிறது என பேசியதற்காக பொருளாதார நிபுணர் கலையரசனை எந்தவித முறையான ஆவணமும், எஃப்.ஐ.ஆர். நகலும் காட்டாமல் அதிகாலை நேரத்தில் இரவு உடையில் வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் தமிழகக் காவல்துறைக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் வாகனத்திற்குப் பதிலாகவாடகைக் காரில் போலீசார்வந்ததாகவும், தன்னை ஒரு குற்றவாளியைப் போல நடத்தியதாகவும் பொருளாதார நிபுணர் கலையரசன் டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வரை தமிழகக் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்தக் கலையரசன்?

பேராசிரியர் கலையரசன், சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் (MIDS) வளர்ச்சி ஆய்வுத் துறையின் இணைப் பேராசிரியராகவும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் வருகைதரு ஆராய்ச்சி ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள நிதி ஆயோக் மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆய்வு நிறுவனம் (ISID) ஆகியவற்றிலும் பணியாற்றியிருக்கிறார். மேலும், அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள பொது விவகார ஆய்வு நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அமெரிக்காவின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சி இணை ஆய்வாளராகவும் பணியாற்றியிருக்கிறார். மும்பை ஐஐடியின் ஆய்வாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார். மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட
என்ற நூலின் இணை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

என்ன பேசினார் கலையரசன்?

விலைவாசி உயர்வு குறித்து கலையரசன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசி வந்திருக்கிறார். குறிப்பாக, சமீபத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்குத் தமிழகத்தில் தற்போது விலைவாசி உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் விலைவாசி உயரும்போதுகூட, தமிழகத்தில் அதைச் சமாளிக்கும் திறன் இருந்ததாகவும், ஆனால் சமகாலத்தில் ஆளுங்கட்சியும் அதிகாரிகளும் இந்த விவகாரத்தைக் கவனிக்கத் தவறுவதாகவும் அவர் பேசியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துகள் இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அவர் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அதிகாலையில் கதவைத் தட்டி விசாரணை?

அதிகாலையில் வீட்டுக் கதவைத் தட்டி, செல்போனைப் பறித்து, இரவு உடையிலேயே தன்னைப் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகக் கலையரசன் குறிப்பிட்டிருக்கிறார்.

அவரது இந்தக் கைது நடவடிக்கைக்குத் தமிழகத்தின் பல முக்கியத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின், இந்த நடவடிக்கையைப் பாசிசத்தின் உச்சம் என விமர்சித்துத் தமிழக அரசைக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Source link