பழனிசாமியிடம் பணம் பெற்றுக்கொண்டு தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் காணாமல் போய்விட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் தவெக வேட்பாளர்கள் 2026
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் எடப்பாடி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருண் குமார் எங்கே இருக்கிறார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை அவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் கடத்தப்பட்டாரா அல்லது சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டாரா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் 234 சட்டமன்ற தொகுதியில் தவெக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் 233 தொகுதியில் உள்ளது.
விஜய் போட்ட மாஸ்டர் பிளான்…களத்தில் நடக்கப்போகும் மாற்றம்?
எடப்பாடி தொகுதி வேட்பாளர் மாயம்
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் காணாமல் போய்விட்டதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போதும்,தொடங்கும் போது பல்வேறு துரோகங்கள் உட்கட்சியில் நடக்கும்.பல்வேறு துரோகிகள் வருவார்கள் மற்றும் செல்வார்கள். அப்படி, அண்ணன் செங்கோட்டையன் மேற்கு மண்டலத்தில் பொறுப்பாளாராக உள்ளார். கடினமாக வெற்றிபெற வேண்டுமென்ற வேலையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு
ஒவ்வொரு பொருப்பாளர்களுக்கும் தவெக தலைவர் விஜய், மக்களிடம் உண்மையாக இருக்க வேண்டும்.நேர்மையாக இருக்க வேண்டும். உங்களின் முகத்தை மக்களிடம்,காட்டுங்கள்.. வெற்றி பெறுவீர்கள். மற்றவர்கள் பணம் கொடுக்கட்டும்.. ஊழல் செய்யப்பட்டும்.. அது நமக்கு தேவையில்லை. நாம் உண்மையுடன் மக்களை சந்தித்து வாக்கு கேட்போம் என்று அறிவுறை கூறியிருந்தார்.ஆனால்,எடப்பாடி தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் அருண்குமார் துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி தொகுதியில் பழனிசாமிக்கு கடும் போட்டியை கொடுப்போம் பழனிசாமி கொடுத்த பணத்துக்கு எடப்பாடி தவெக வேட்பாளர் விலை போய்விட்டார். அவர் ஒரு கருப்பு ஆடு என்று ஆவேசமாக ஆதவ் அர்ஜுனா கூறினார்.
பின்னணியில் எடப்பாடி பழனிசாமி காரணமா?
இதுபோன்ற அரசியலில் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். தவறான அரசியல். கண்டிப்பாக மக்களுக்கு தெரியும் இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டு வருகிறார்கள்.. வேட்பாளர்களை பணம் கொடுத்து தூக்குவது, எதிர்தரப்பில் இருந்து வேட்பாளர்களை இல்லாமல் வெற்றி பெறுவது உள்ளிட்டவை அனைத்தும் ஜனநாயகம் மற்றும் செயல். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்கு நிச்சயமாக தேர்தல் முறையில் நாங்கள் எடப்பாடி தொகுதியில் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்வோம். வரும் நாட்களில் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நிச்சயம் பிரச்சாரம் நடத்தப்படும் என்று கூறினார். மேலும் எடப்பாடி தொகுதியில் சுயட்சியாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேள்விக்கு? அதனை தலைவர் விஜய் முடிவு செய்வார் அதற்காக ஆலோசனையும் நடத்த உள்ளார் என்று கூறினார்.
