சாய் பல்லவி திருமணம்: சாய் பல்லவிக்கு 34 வயதாகிறது. அவருக்கு ஏன் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறது என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். தங்கச்சி பூஜாவுக்கு திருமணமாகிவிட்டது. அப்படி இருக்கும்போது அக்கா இப்படி சிங்கிளா இருக்கிறாரே என வருத்தப்படுகிறார்கள். இந்நிலையில்தான் நடித்திருக்கும் ராமாயணா படத்தை விளம்பரம் செய்ய நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரன்பிர் கபூருடன் கலந்து கொண்டார் சாய் பல்லவி.
அப்பொழுது சாய் பல்லவியிடம் சில கேள்விகள் கேட்டார் அமிதாப் பச்சன். அதில் திருமணம் பற்றிய கேள்வியும் அடக்கம். எப்படிப்பட்டவரை உங்களின் வாழ்க்கை துணையாக தேர்வு செய்வீர்கள் என கேட்டார் அமிதாப் பச்சன். அதற்கு சாய் பல்லவியோ, அவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். செல்ஃப் சென்டர்டாக இருக்கக் கூடாது. நம் வாழ்க்கையில் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தவராக இருக்க வேண்டும். தெளிவு இருக்க வேண்டும். தவறு செய்யலாம் ஆனால் அவர் செய்ததால் தான் நான் செய்தேன் என்று பேசக் கூடாது. பெரிய பட்டியலிடுகிறேன். ஆனால் நல்லவராக இருக்கணும். சமைக்கத் தெரிந்திருந்தால் நல்லது என்றார்.
சமையல் விஷயத்தை கேட்டதும் அரங்கில் இருந்த பெண்கள் எல்லாம் பயங்கரமாக கைதட்டி சிரித்தார்கள். வருங்கால மனைவிக்கு சமைக்கத் தெரிய வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே போன்று தன் வாழ்க்கைத் துணையாக வரும் ஆணுக்கு சமையல் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் சாய் பல்லவிக்கும் அதே எதிர்பார்ப்பு இருக்கிறது.
தொடரும் வெறுப்பு: நிதேஷ் திவாரி இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நவம்பர் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கும் ராமாயணா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் சேலையில் அழகாக கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி. இந்நிலையில் இந்தி சினிமா ரசிகர்களின் வெறுப்பு மட்டும் அடங்கிய பாடில்லை. இன்னும் கூட சாய் பல்லவியை விளாசுகிறார்கள்.
ராமர் ரன்பிர் கபூர் மனைவி சீதாவாக சாய் பல்லவியை நடிக்க வைத்திருக்கிறார் நிதேஷ் திவாரி. இந்நிலையில் படத்தை பார்க்காமல் ட்ரெய்லரை மட்டும் பார்த்துவிட்டு சாய் பல்லவியை அவரின் நடிப்புக்காக அல்ல மாறாக உருவத்திற்காக தொடர்ந்து விமர்சிக்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள்.
சூர்ப்பனகை கதாபாத்திரம்: சாய் பல்லவிக்கு கூர்மையான மூக்கு இல்லாமல் போனதற்கு அவர் என்ன செய்வார் பாவம். ஆனால் அவ்வளவு பெரிய மூக்கு இருக்கும் சாய் பல்லவியை தானே சூர்ப்பனகையாக நடிக்க வைக்க வேண்டும். அவரை பார்த்தால் சீதையாக அல்ல ராட்சசி மாதிரி இருக்கிறார். மேக்கப் போட்டும் கூட அழகாக தெரியவில்லை. சாய் பல்லவிக்கு பின்னால் நிற்கும் பெண்கள் கூட சீதையாக நடிக்கும் அளவுக்கு அழகாக உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ரூ. 4 ஆயிரம் கோடி பட்ஜெட் படம் ஊத்திக்கொள்ள காரணமாக இருக்கப் போகிறார் சாய் பல்லவி என்று வெறுப்பபை கக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்தி சினிமா ரசிகர்கள். மக்கள் தன்னை உருவக்கேலி செய்வது சாய் பல்லவிக்கு நிச்சயம் இந்நேரம் தெரிந்திருக்கும். ஆனால் எதற்கெடுத்தாலும் நாலு பேர் நாலு விதமாக பேசத் தான் செய்வார்கள் என்பதுவும் அவருக்கு தெரியும். அதனால் அவரின் கவனம் ட்ரோல்ஸ் மீது அல்ல படத்தை விளம்பரம் செய்வதில் மட்டுமே உள்ளது.
Source link
