நவம்பர் இரண்டாம் தேதி திங்கட்கிழமை அன்று நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் முதல் சுற்று முடிந்திருக்கக்கூடிய சூழலில், நவம்பர் முதல் வாரத்தில் இரண்டாவது சுற்று தொடங்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
இது தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்குத் திசைகளில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், 48 மணி நேரத்திற்குப் பிறகு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தமிழகத்தின் சில பகுதிகளுக்குக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில்ஞாயிற்றுக்கிழமைஅன்று மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் எனச் சொல்லப்படுகிறது.
அதிர்ச்சி தரும் Weather Reports! El-Nino effectஆள் வரப்போகும் பாதிப்பு!
சென்னையில் இரண்டு நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. நவம்பர் மூன்றாம் தேதி நீலகிரியின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?
சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
வடகிழக்குப் பருவமழையின் இரண்டாவது சுற்று தொடங்குமா?
பருவமழைக்கான அடுத்தகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், வடகிழக்குப் பருவமழையின் இரண்டாவது சுற்று நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே கரையைக் கடந்த அர்னாப் புயலின் தாக்கத்தால், சென்னையின் எண்ணூர் முதல் திருவான்மியூர் வரையிலான கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்பட்ட சூழலில், இதுபோன்ற காலநிலை நிலவும்போது கடலுக்குச் செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
