சசிகலா காலில் விழுந்து இபிஎஸ் முதலமைச்சர் பதவி பெற்றதை தாம் விமர்சிக்கவில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சரான பின் சசிகலா காலை வாரிவிட்ட துரோகத்தை தான் மக்களிடம் எடுத்துரைப்பதாகவும் பேசினார்.
மன்னார்குடியில் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மன்னார்குடி பெரியார் சிலை அருகே பேசியதாவது: மன்னார்குடி தொகுதியில், திமுகவுக்கு எதிராக, ஒட்டுமொத்த துரோக கூட்டமும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

அதிமுக பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் நான்கு முழம் கயிற்றில் தொங்கி விடுவேன் என்றார் ஒருவர், பழனிசாமியை டயர் நக்கி என விமர்சனம் செய்தவர் மற்றொருவர். தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவை கைப்பற்றுவதற்காகவே கூட்டணி அமைத்துள்ளார். இப்படிப்பட்ட துரோக கூட்டம் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர்.

முரட்டு அடிமை தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த தேர்தல் “தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையிலான தேர்தல்” என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். டெல்லி அணிக்கு மோடிதான் தலைவராக உள்ளார். பழனிசாமியை பொறுத்தவரை ஜெயலலிதாவின் காலினை பிடித்தார், அதன் பின்னர் சசிகலா, தினகரன் காலினை பிடித்தார். தற்சமயம் மோடியின் காலினை பிடித்துக் கொண்டிருக்கிறார். இதைத்தான் நான் முரட்டு அடிமை என்று கூறுகிறேன்.

அனைத்தும் பறி போய் விடும் இவ்வாறு கூறியதற்கு எனக்கு அனுபவம் இல்லை என்று பழனிச்சாமி கூறுகிறார் உண்மையில் எனக்கு இதுபோன்று அடிமையாக இருந்த அனுபவம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். காலில் விழுவது தவறில்லை. ஆனால், சசிகலாவின் காலையே வாரிவிட்டார். இதைத்தான் நான் கூறி வருகிறேன்.

தற்போது சசிகலாவும் நேரடியாக களத்துக்கு வந்து இதுதொடர்பாக கேள்வி கேட்கிறார். நான் சொன்னது சரிதானே என்றும் கூறுகிறார். எனவே இந்த தேர்தலில் சங்கி கூட்டம் வெற்றி பெறக்கூடாது. அவ்வாறு வெற்றிபெற்றால் நமது உரிமைகள் அனைத்தும் பறிபோய்விடும்.இவ்வாறு பேசி உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
