பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கோஆபரேட்டிவ் சொசைட்டியின் (BLM) தலைவர் ஆர். பிரேம்குமார். இவர் ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 3 ஆம்ம் தேதி வெளியான தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) குறிப்பில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யை சந்தித்தபோது, அவர் நியூஸ் தமிழ் 24×7 நிறுவனத்தின் இயக்குநராகக் குறிப்பிடப்பட்டிருந்தார். BLM நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகள் போக்குவரத்து, வீட்டுவசதி, கல்வி, நகைகள், விருந்தோம்பல் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளன.
யார் இந்த ஆர். பிரேம்குமார்
பிரேம்குமார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். அவரது தந்தை சென்னை துறைமுகக் கழகத்தில் பணியாற்றியதால், சென்னையில் வளர்ந்தார். 2006-ம் ஆண்டு தனது நான்கு நண்பர்களின் ஆதரவுடன் BLM நிறுவனத்தைத் தொடங்கியதாக அவர், சாதாரண மக்களுக்கு நிதியுதவி வழங்கக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்கும் நோக்கில் சென்னையில் BLM நிறுவப்பட்டது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரேம்குமார் அதன் நிறுவனர் மற்றும் தலைவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
கோடி கணக்கில் மோசடி
ஆர். பிரேம்குமார் மீது வைப்புத் தொகையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம், தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கும் பிற தொழில் நிறுவனங்களுக்கும் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் திரையரங்குகள் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. குறிப்பாக இவர் ஓய்வுதையர்களை குறிவைத்தே மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சென்னையில் கைது
கேரள மாநிலம கோழிக்கோடு குற்றப்பிரிவின் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் பிரேம்குமாரை இன்று சென்னையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,அவர் உடல்நிலை சீரானதும் அவர் கோழிக்கோடுக்கு அழைத்துச் செல்லப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
முதல்வர் விஜய் சந்தித்த பிரேம்குமார்
தமிகழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ்நாடு முதல்வர் விஜய்-யை பல்வேறு நிர்வாக நபர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவ்வகையில் கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய்-யை தலைமைச் செயலகத்தில், News தமிழ் 24×7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர் என அரசின் அதிகாரபூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Source link
