தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள மாநிலம் கோழிக்கோடு காவல்துறை இன்று சென்னையில் வைத்து கைது செய்துள்ளது. இந்நிலையில் அவர் தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள மாநிலம் கோழிக்கோடு காவல்துறை இன்று சென்னையில் வைத்து கைது செய்துள்ளது. இந்நிலையில் அவர் தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்தை குறிப்பிட்டு, 5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அறிக்கை
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
பிரேம்குமார் பேருந்துகளில் தவெக எம்எல்ஏ-க்கள்
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்றம்?
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் – ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? என கேள்வி எழுப்பிய அவர், அப்படி எந்த “விவகாரமான” தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் – கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
CBI, SFIO, ED அமைப்புகள் விசாரிக்க வேண்டும்
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பி உதயநிதி ஸ்டாலின், இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் – கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய் சந்தித்த பிரேம்குமார்
தமிகழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ்நாடு முதல்வர் விஜய்-யை பல்வேறு நிர்வாக நபர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவ்வகையில் கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய்-யை தலைமைச் செயலகத்தில், News தமிழ் 24×7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர் என அரசின் அதிகாரபூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Source link
